புதன், 6 மார்ச், 2024

பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களின் போக்கு!

பாரம்பரிய உணவுகளை எப்படி மறந்தோம்?

'வாழ்பதற்காக உண், உண்பதற்காக வாழாதே', என்று ஒரு பழமொழி உள்ளது. காலம் செல்லச் செல்ல நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மறந்துகொண்டிருக்கிறோம். ஏன் உடலுக்கு ஆகாத தின்பண்டங்களிடம் சென்று நம் சுவையான ஆரோக்கியமான தமிழ் பாரம்பரிய உணவுகளை மறுக்கிறார்கள்? ஏன் என்று பார்ப்போம்.

பலன் கிடைக்காத சுவை!

முதலில், நம் மக்கள் சுவைக்கு அதிக முக்கியத்தை கொடுக்கிறார்கள். நாக்கில் இருக்கும் சுவைக்கு ஆசை பட்டுத் தன் ஆரோக்கியத்திற்கு மேல் அக்கறை இல்லை. சுவையும், ஆரோக்கியமும் உள்ள நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை ஏன் மறந்துகொண்டோம்?

சத்தில்லா உலகம்!

இன்னொரு காரணம் உள்ளது. நம் உடலில் சத்து இல்லையென்றால் என்ன செய்வது? நம் உடல் நலத்தில் மேல் அக்கறை இருக்கிறதா? முப்பத்தியொரு லட்ச குழந்தைகள் சத்து குறைவு காரணமாக மரணம் அடைகிறார்கள். இதற்குக் காரணம் குழந்தைகளும் அல்ல, பெற்றோர்களும் அல்ல, யாரும் அல்ல! சத்து குறைவு தான் காரணம்! அதை ஏற்றுவதற்கு ஒரு சுலபமான வழியுள்ளது. நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை உண்டாலே போதும். சத்து ஏறிச் செல்லும்!

நாக்கிற்கு பிடிக்காமல் போவது!

அடுத்த முக்கியமான காரணம் தமிழ் பாரம்பரிய உணவுகள் பிடிக்காமல் போவது. சிலபெயர்களுக்கு காய்கறிகளிலும் தான் பிடிக்கவில்லை, ஆனாலும் உண்டுகிறார்கள்.

 ஏன்? சத்துமேல் அக்கறை உள்ளது. அதனால் நம் தமிழ் பாரம்பரிய உணவுகளிலும் காய்கறிகளைப் போல் உண்ண வேண்டும். சுவையும், ஆரோக்கியமும் உள்ள நம் தமிழ் பாரம்பரிய உணவுகளில் பிடிக்காமல் போவதற்கு ஒன்றும் இல்லையே!

ருசி, ஆரோக்கியம், சத்து !

கடைசியில், உடல் நலம் அடிக்கடி கெட்டுப்போவதற்கு காரணம் சத்து குறைவுதான். அதற்கான தீர்வு நம் தமிழ் பாரம்பரிய உணவுகளில் தான் உள்ளது. சுவையும் உள்ளது, சத்தும் உள்ளது, உடலுக்கும் நல்லது. ஏன் சாப்பிடமாடுகிறோம் என்று சிந்தித்து பாருங்கள்!

சிந்தித்து பாருங்கள்!

  1. அவ்வளவு ஆரோக்கியங்கள் உள்ளதா தமிழ் பாரம்பரிய உணவுகளில்?

  2. என்ன பலன்கள் கிடைக்கிறது?

  3. ஏன் நம் பழைமையை நோக்கிச் செல்லக் கூடாது 

  4. பழைய காலத்தில் நோக்கிச் சென்றால் என்ன?

  5. குழந்தைகளுக்கு உடல் நலம் கேட்டுபோவதற்கு அடிப்படை காரணம் என்னவாக இருக்கும்?

A child standing in front of a wall of plants

Description automatically generatedAadhavan Sriram & Prannav S 

Grade 7 

Budding minds international School, 

Sri annamachari street, 

Manimangalam, 

Chennai 600301






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன