மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
சனி, 6 ஜூன், 2020
கணித்தமிழ் கற்க/கற்பிக்க வேண்டிய அறிதல்கள்
செவ்வாய், 2 ஜூன், 2020
மதிப்பீட்டுரை - தெலுங்கு-தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள்
தமிழும் தெலுங்கும் உறவுடைய மொழிகள். திராவிடத்திலிருந்து இவ்விரண்டும் பிரிந்தது என்பது அறிஞர்கள் கருத்து. திராவிடர் என்றாலே அது தமிழர் எனக் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அறிஞர்கள் பார்வையில் இருந்து வருகிறது. தமிழர்தம் பார்வையில் திராவிடர் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அது இருக்கட்டும் ஆய்வாளர் ஆ.ஈஸ்வரன் ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் ஆகிய ஆய்வுகளை மேற்கொள்ளும் காலத்தும் அதன் பின்பும் மேற்கொண்ட ஆய்வுகளை ஒரு பொருண்மை கருதி ‘தெலுங்கு - தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள் (உறவுநிலை - இலக்கியம் – நூலாய்வு) எனும் தலைப்பில் தொகுத்து நூலாக்கியுள்ளார். இம்முயற்சி வரவேற்கத் தக்கதும் பாராட்டுக்குரியதும் ஆகும். அது நிற்க.
வியாழன், 28 மே, 2020
உள்ளடக்கமும் நடத்தை விதிகளும் 1
நீங்கள் சட்டபூர்வமான நோக்கங்களுக்காக மட்டுமே உடேமியைப் பயன்படுத்த முடியும். உடேமி இணைய மேடையில் நீங்கள் இடுகையிடும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் தாங்கள்தான் பொறுப்பு. உடேமி நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், சட்டத்திற்கு ஏற்ப நீங்கள் பதிவேற்றும் மதிப்புரைகள், கேள்விகள், பதிவுகள், படிப்புகள் இன்னும் பிற உள்ளடக்கங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மதிக்க வேண்டும். பெரிய குற்றங்களுக்காக உங்கள் கணக்கை உடேமி தடை செய்யலாம். உடேமி இணைய மேடையில் உங்கள் பதிப்புரிமையை யாராவது மீறுவதாக நீங்கள் நினைத்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
உள்ளடக்கமும் நடத்தை விதிகளும் 2
நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், நீங்கள் பதிவுசெய்த படிப்புகள் அல்லது பிற உள்ளடக்கங்களின் பயிற்றுவிப்பாளர்களிடம் கேள்விகளைக் கேட்கவும், உள்ளடக்கத்தின் மதிப்புரைகளை இடுகையிடவும் உடேமி சேவைகள் உங்களுக்கு உதவும். சில உள்ளடக்கங்களுக்கு, "வீட்டுப்பாடம்" அல்லது சோதனைகள் என உள்ளடக்கத்தை சமர்ப்பிக்க பயிற்றுவிப்பாளர் உங்களை அழைக்கலாம். உங்களுடையது அல்லாத எதையும் இடுகையிடவோ சமர்ப்பிக்கவோ வேண்டாம்.
பெருமூச்சு – காசி ஆனந்தன்
• முன்னுரை
• காசி ஆனந்தன் வரலாறு
– பிறப்பு
– கல்வி
– பணி
– படைப்பு
• பெருமூச்சு
– வலிமையான தமிழகம்
– விழிப்பான தமிழகம்
– படை நடத்திய தமிழகம்
– கடல் கடந்த தமிழகம்
– வீரப்பெண்களைப் பெற்ற தமிழகம்
• முடிவுரை
உள்ளடக்கமும் நடத்தை விதிகளும் 3
உங்கள் பாடநெறி, உள்ளடக்கம் சட்டம் அல்லது பிறரின் உரிமைகளை மீறுவதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (எடுத்துக்காட்டாக, இது அறிவுசார் சொத்து அல்லது பிறரின் பட உரிமைகளை மீறுவதாக நிறுவப்பட்டால் அல்லது சட்டவிரோத செயலைப் பற்றியது), உடேமி அதைக் கண்டுபிடித்தால் உங்கள் உள்ளடக்கம் அல்லது நடத்தை உடேமி நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறுகிறது, அல்லது உங்கள் உள்ளடக்கம் அல்லது நடத்தை சட்டவிரோதமானது, பொருத்தமற்றது அல்லது ஆட்சேபிக்கத்தக்கது என்று உடேமி நம்பினால் (எடுத்துக்காட்டாக, நீங்கள் வேறொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்தால்), உங்கள் உள்ளடக்கத்தை உடேமி தளத்திலிருந்து அகற்றலாம். உடேமி பதிப்புரிமைச் சட்டங்களுடன் இணங்குகிறார். மேலும் விவரங்களுக்கு உடேமி அறிவுசார் சொத்துக் கொள்கையைப் பாருங்கள்.
சிக்கனம் – சுரதா
• முன்னுரை
• சுரதா வரலாறு
– பிறப்பு
– கல்வி
– பணி
– படைப்பு
• சிக்கனம்
– பரபரப்பான வாழ்க்கை
– பகட்டு வாழ்க்கை
– சிக்கன வாழ்க்கை
– கூழாங்கல்லில் பாசி படிவதில்லை
– பேரறிவின் துணை
– எது சிக்கனம்?
• முடிவுரை
வெள்ளி, 1 மே, 2020
நாடகக் கலை
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி
.......
தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையின் பெருமையையும்,
கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள் என்பதையும்,
இந்தக் கலைகள்தான் தமிழர் சூழமைவுக் கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன என்பதையும் நம் சிறப்பு விருந்தினர் அவருக்கே உரிய பாணியில் மிகவும் தெளிவாக அழகாக நாடக ஆளுமை முனைவர் பார்த்திபராஜா அவர்கள் விளக்கிக் கூறினார்.
இது போன்ற நல்லதொரு நாடக உலகிற்கு எங்களை அழைத்துச் சென்றமைக்குத் துறைத்தலைவர் அவர்களுக்கும், இந்நிகழ்விற்கு உறுதுணையாய் நின்ற எம் துறைப்பேராசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
🙏🙏🙏
# பேரா.க.விக்னேசு
புதன், 29 ஏப்ரல், 2020
ஆட்டிப்படைக்கும் நுண்ணுயிரிகள்
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் இன்று (28.04.2020) ஆட்டிப்படைக்கும் நுண்ணுயிரிகள் எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்பு இணையவழி நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூழலியாளர் திரு.சதாசிவம் அவர்கள் நுண்ணுயிரிகளைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும், கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறை பற்றியும் மிகவும் தெளிவாக விளக்கிக் கூறினார். மேலும் இவர் மாணவர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவாகப் புரியும்படி பதிலளித்தார் என்பதும் இந்நிகழ்வில் சென்னை, விழுப்புரம், குற்றாலம், திருப்பூர் கோவை போன்ற நகரப் பகுதியைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.
5 Days E-Career Guidance
Dear Participant,
Greetings from Sri Krishna Adithya College of Arts and Science!
This is a reminder for the "5 Days E-Career Guidance" which commences from tomorrow.
We invite you all to this fruitful and rewarding Webinars from April 27, 2020 to May 01, 2020, between 12:00 and 01:00 PM.
WEBINAR 3:
GATEWAY TO PROFESSIONAL COURSES
Sri.G.BALASUBRAMANIAM
Company Secretary, Roots Multi Clean Ltd.,CBE
Date: April 29, 2020
Time: 12:00 to 01:00PMLink: https://meet.google.com/ufs-qbmq-uqm
Download the Google Meet APP
Join through any of these platforms : PC / Mac / iPad / iPhone / Android device
Also follow the below mentioned link for 2 more Highlighting Webinars
Link: http://www.skacas.ac.in/career_guidance-2020/
சனி, 25 ஏப்ரல், 2020
5 days E-Career Guidance Programme
Due to the unprecedented turbulence of COVID 19, Sri Krishna Adithya CAS has taken an initiative to conduct *5 days E-Career Guidance Programme* for the Class 12 students and their parents to help them choose their right career goal in the academic stream of Arts & Science, planning and giving a direction for the best of the opportunities ahead with the leading experts in the field along with the well experienced admin team of the college .
Kindly share this e -brochure with link to all your friends and relatives who are in need and help them to choose their right career.
http://www.skacas.ac.in/career_guidance-2020/
வெள்ளி, 17 ஏப்ரல், 2020
விழித்திரு... தனித்திரு....
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தேன்தமிழ் மன்றத்தின் சார்பாக, 17/4/2020 அன்று காலை 11.00 மணி முதல் 12.00 மணிவரை "விழித்திரு... தனித்திரு... (Covid 19)" எனும் பொருண்மையிலான கொரானா விழிப்புணர்வு உரையாடல் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் மருத்துவர் கு.சுப்பிரமணியன் (தலைவர், கம்பன் கலைக்கூடம், கோயமுத்தூர்) அவர்கள் சூம்வழி (Webinar) உரையாடலில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாகக் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 21 பிப்ரவரி, 2020
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் அரத்தக் கொடை முகாம்
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கமும் IMA Masonic Rotary Midtown Mahaveers Blood Bank சேவையகமும் கோவை மாவட்ட இந்தியச் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து 21.02.2020 அன்று அரத்தக்கொடை முகாமை (Blood Donation) நடத்தின. கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் 62 மாணவர்கள் அரத்தக்கொடை வழங்கினார்கள். இந்நிகழ்வினை இளையோர் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர் முனைவர் த.சத்தியராஜ் அவர்களும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் தலைவர் தீபக்குமார் ( கணிதத் துறை) அவர்களும் ஒருங்கிணைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 18 பிப்ரவரி, 2020
செவ்வாய், 11 பிப்ரவரி, 2020
திங்கள், 10 பிப்ரவரி, 2020
இனம், மலர் : 5 இதழ் : 20
இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் - நாளை முதல் வாசிக்கலாம்.
பிப்ரவரி 2020 மலர் : 5 இதழ் : 20
February 2020 Volume V Issue 20
......................
உள்ளே ...
.......................
தமிழ்ச் செவ்வியல்
சங்க இலக்கியப் பதிவுகளில்
மருத நில விளையாட்டுகள்
Marutham Land games in Sangam literature
முனைவர் மூ.பாலசுப்பிரமணியன்/Dr.M.Balasubramanian I 4
https://inamtamil.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/
திருக்குறளில் நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்)
Thirukuralil nilavu maraippu (sandirakiraganam)
முனைவர் இரா.இந்து/Dr.R.Indhu I 17
https://inamtamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa/
பக்தி இலக்கியம்
திருமூலர் பற்றிய கதைகள் உணர்த்தும் உண்மைகள்
The Facts in behind of stories about Thirumular
முனைவர் ஆ.மணி/Dr.A.Mani I 24
https://inamtamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
தற்கால இலக்கியம்
தூப்புக்காரி புதினத்தில் பண்பாடு - ஓர் ஆய்வு
CULTURE OF THUPUKKARI NOVEL
ரா.வனிதா /R.VANITHA I 30
https://inamtamil.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/
வாஸந்தியின் நாவலில்
மரபு உடைத்தலும் உரிமை பேணலும்
Vasnthi Navalil marapu udaithalum urimai penalum
பி.அனுராதா/P.Anurathan I 37
https://inamtamil.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa/
வரலாறு - சமூகவியல் - புவியியல் - கல்வியியல்
சோழர்கால வடமொழிக் கல்லூரிகள்
SANSKRIT COLLEGES IN CHOLA PERIOD
மு.கயல்விழி/M.kayalvizhy I 48
https://inamtamil.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0/
தமிழ், தெலுங்கு நுட்பவியல் கலைச்சொற்களின் அமைப்பும் மொழித்தூய்மையும்
Structure and Language Purity of Technical Terminology in Tamil and Telugu
முனைவர் சி.சாவித்ரி/Dr.Ch.Savithri I 55
https://inamtamil.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/
சர்வக்ஞர் பார்வையில் கடன் கொடுத்தலும் வாங்கலும்
(SARAVAJANAR PARVAIEL KADAN KODUTHTHALUM VANGALUM)
முனைவர் சே.முனியசாமி/Dr S.MUNIYASAMY I 66
https://inamtamil.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f/
வெள்ளி, 7 பிப்ரவரி, 2020
மீக்கோட்பாட்டாய்வு நோக்கில் திராவிடமொழிகளின் முதல் இலக்கண நூல்கள் (Meta Theory Concept in Dravidian First Grammars) - நன்றி மறவற்க
பல்கலைக்கழக மானியக்குழுவால் வழங்கப்பெற்ற நிதியுதவின்கீழ் "மீக்கோட்பாட்டாய்வு நோக்கில் திராவிடமொழிகளின் முதல் இலக்கண நூல்கள் (Meta Theory Concept in Dravidian First Grammars)" எனும் பொருண்மையில் மேற்கொண்ட ஆய்வு, கோவை இந்துஸ்தான் கல்லூரியில் தொடங்கி கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நிறைவுற்றது. இவ்வாய்வில் தொடர்ந்து பயணிக்க பல்வேறு வகையில் என் எழுத்துக்களில் இடம்பெற்ற தெளிவின்மைகளைத் திருத்த நெறிப்படுத்தி வரும் எம் பேராசிரியர் இரா.அறவேந்தன் அவர்களுக்கும், இவ்வாய்விற்கு ஒத்துழைப்பு நல்கிய இரு கல்லூரி நிருவாகத்தினருக்கும், இரு கல்லூரி முதல்வர்களுக்கும், இரு கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர்கள், உடன் பணியாற்றிய, பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும், என் துணைவி இரா.நித்யா, என் குழந்தைகள் நி.ச.தமிழினி, நி.ச.பாவாணர் ஆகியோருக்கும், இவ்வாய் வைச் செய் என ஆற்றுப்படுத்திய என் மைத்துனர் பேரா.மு.முனீஸ் மூர்த்தி அவர்களுக்கும் ஒப்படைப்புச் செய்யும் ஐயங்களைத் தெளிவுபடுத்திய பேரா.பரமசிவன் அவர்களுக்கும் இதற்கு மறைமுகமாக உதவியவர்களுக்கும் நேரடியாக உதவி நல்கியவர்களுக்கும் நன்றியுடையனாவேன்.
செவ்வாய், 28 ஜனவரி, 2020
மொழிபெயர்ப்புக் கலை
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தேன்தமிழ் மன்றம் சார்பாக "மொழிபெயர்ப்புக்கலை"
எனும் தலைப்பில் மாணவர்களுக்கு மொழித்திறன் வளர்க்கும் விதமாக சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. செல்வநாயகி வரவேற்றார். இந்நிகழ்விற்கு நமது கல்லூரியின் முதல்வர் முனைவர். செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராகப்
பேராசிரியர் முனைவர்.பி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பின் வழிமுறைகளைக் கற்பித்தார். தமிழ், மலையாளம், ஹிந்தி, பிரெஞ்சு மாணவர்கள் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பின் தேவையையும் பயன்களையும் வேலைவாய்ப்பையும் அறிந்துகொண்டு பயன் அடைந்தனர்.
செவ்வாய், 21 ஜனவரி, 2020
சிகரங்களைச் செதுக்குவோம்
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக "சிகரங்களைச் செதுக்குவோம்"
எனும் தலைப்பில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நமது கல்லூரியின் முதல்வர் முனைவர். செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கைப் பேச்சாளர்,
பேராசிரியை முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவர் தனது சிறப்புரையில் இன்றைய தலைமுறை மாணவர்களின் கவனச்சிதைவு மற்றும் அவற்றின் காரணிகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து மீண்டு எவ்வாறு வாழ்வில் உயரலாம் எனவும்,
மாணவர்கள் தங்களைத் தாங்களே செதுக்கிக் கொண்டு, தங்களுடைய வாழ்வில் ஏற்படும் எல்லா இன்னல்களையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் மேதகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலானவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு சிகரங்களைப்போல் செதுக்கிக் கொண்டு சமுதாயத்தில் மிகப்பெரிய நிலையை அடைந்தனர் என்பது பற்றியும் அருமையாகப் பேசி மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து சிகரங்களைச்செதுக்க ஊக்கப்படுத்தினார்.
செய்தியாக்கம்: பேரா.ப.இராஜேஷ்
செவ்வாய், 14 ஜனவரி, 2020
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கிராமியப் பொங்கல் விழா 2020
“ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கிராமியப் பொங்கல் விழா 2020” கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கிவைத்தார். தமிழர் பாரம்பரியப்படி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். வழிபாட்டின் போது மாணவிகள் கும்மியடித்தல் போன்ற கிராமிய நடனங்களை ஆடிப்பாடிக் கொண்டாடினார்கள். இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு கோலம் போடுதல், ரங்கோலி வரைதல், கயிறு இழுத்தல், உறியடித்தல், சாக்குப்போட்டி, லெமன் மற்றும் ஸ்புன், பலூன் உடைத்தல், கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கிப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தமிழர் பாரம்பரிய அங்காடிகள் திறக்கப்பட்டு பல்வேறு பாரம்பரிய பொருட்கள் விற்கப்பட்டன.
செய்தி ஆக்கம் : பேரா.ப.இராஜேஷ்
வியாழன், 9 ஜனவரி, 2020
ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக 09.01.2020 இன்று “ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா” நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினராக முனைவர் இரா.குணசீலன்(இணையத்தமிழ் ஆய்வாளர்) அவர்கள் கலந்துகொண்டு “இணையத்தமிழ் நுட்பங்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். வலைப்பதிவு, விக்கிப்பீடியா, யுடியுப், குறுஞ்செயலிகள், தமிழ் எழுத்துருக்கள், இணையவழிக் கல்வி, இ-புக் ஆகியவற்றை இணையங்கள் மூலம் தமிழில் பதிவேற்றவும் தரவிறக்கம் செய்வதற்கும், தமிழ் மொழியை உலகளாவில் வளர்ச்சி அடைய செய்யக்கூடிய செயல்கள் குறித்து தன் கருத்துரையில் விளக்கினார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவாக சான்றுகளுடன் விளக்கினார். இக்கருத்தரங்கம் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்தது.
ஆக்கம் :
பேரா.ப.இராசேசு
வியாழன், 2 ஜனவரி, 2020
தமிழியல் ஆய்வுகள்: அடைவுபடுத்தலும் மதிப்பிடுதலும் (International Seminar on Indexable and Evaluation of Tamilology)
இணைந்து மார்ச் 2020இல் பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதற்கு உலகத் தமிழாய்வாளர்கள் ஆர்வலர்கள் கட்டுரை
வழங்கிச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.