சனி, 6 ஜூன், 2020

கணித்தமிழ் கற்க/கற்பிக்க வேண்டிய அறிதல்கள்

கணித்தமிழ் என்றால் என்ன?

கணித்தமிழ் என்பது கணினிவழி இயங்கும் தமிழ் எனக் குறிப்பிடலாம். இதை இப்படியும் புரிந்துகொள்ளலாம். கல்லில் எழுதப்பட்ட தமிழ்மொழியைக் கல்வெட்டுத்தமிழ் என்கிறோம். அதுபோலத்தான் கணினியில் எழுதக்கூடிய அல்லது கணினியில் இயங்கக்கூடிய தமிழைக் கணித்தமிழ் என்று இன்று நாம் அழைக்கிறோம். கணினிக்குத் தெரிந்தது 0, 1 என்ற எண் மட்டுமே.

கணித்தமிழை ஏன் வளர்க்க வேண்டும்?

நம் தமிழ்மொழி காலந்நோறும் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி வளர்ந்து வந்தது. பானை ஓடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, காகிதச்சுவடி, அச்சு என அதன் வளர்ச்சிப் படிநிலைகள். இன்று அதன் பயன்பாட்டுக் கருவி கணினி. எனவே, அதில் நம் மொழியை இடம்பெறச் செய்வது காலத்தின் கட்டாயம். அதற்காக உழைக்கவேண்டியது நம் கடமை.

கணித்தமிழில் கற்க/கற்பிக்க வேண்டியவை எவை?

கணித்தமிழில் கற்க/கற்பிக்க வேண்டிய பகுதிகள் நிரம்ப உள்ளன. அவற்றை இங்குத் தொடர்ந்து கற்கலாம். அதன் பட்டியல் வருமாறு;-
  • திறன்பேசி எழுதிகள்
  • கணினி எழுதிகள்
  • வலைப்பூ
  • கூகுள் வகுப்பறை
  • யுடியூப் வலைக்காட்சி
  • எழுத்துருமாற்றி
  • சொற்பிழைத் திருத்தி
  • மின்னூல் உருவாக்கம் 
  • மென்பொருள் நிறுவும் முறை
  • கூகுள் மீட் பயன்படுத்தும் முறை
  • காணொலி உருவாக்கம்
  • படிவம் உருவாக்கல்
  • மின்சான்றிதழ் உருவாக்கல்
என்பன போன்ற அனைத்துப் பொருண்மைகளும் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து நாம் இங்குப் பார்க்கவிருக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

Bibliography of Tamil Literary History

Pillars of Tamil Literary History: Scholarly Works This compilation highlights the significant contributions of ...