செல்லுலகில் செல்ல
செவிகெடுக்கும் இன்னிசை
மூளைச் சலவை செய்யும்
நீலவண்ணக் காவியம்
பகுத்தறிவைப் பகடையாக்கும்
பற்பல செயலி விளையாட்டு
மதியை மதிப்பிழக்கச் செய்வன...
உணர்ந்திடு!
எழுந்திடு!! விரைந்திடு!!!
வந்தோரை வரவேற்று
வருவிருந்து சிறுதானியமாம்
குழுவாய் அமர்ந்து உண்ண
குறியறிந்து கூடும்!
உழுது உழுது ஓடாய்த் தேய்ந்து
உள்ளதை இல்லையெனாது
அள்ளி அள்ளி வழங்கிய
வள்ளலே அருந்தமிழர்
உலகார் அறிய
வலைப்பூ தொடங்கு!
தமிழரின் அரிய உணவுப் பண்பாட்டைத்
தமிழால் அறிவி!
பானி பொறிக் கலவை
சுவைஞர்கள் மறக்க
சுவைத்தே வலையேற்று
சுவைக்கட்டும் சுவைக்கனியாய்
வலைப்பூ கண்ணே!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப்
பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
நன்றி
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன்! கவிதை அருமை! வாழ்த்துக்கள் நன்றி!!
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி!!
நீக்குநன்றி.
நீக்கு