அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவர்களைத்தான்
தோழியும் நோக்கினாள்
களவு கனிந்தது
கற்பாய் மலர்ந்தது
நனியுறும் சங்கக்
காதல்!
சீதையும் இராமனும்
சிலிர்த்து
நோக்க
சிறப்பாய்த்
திருமணம் நடத்தி
சீர்பெறச் சிறப்பித்தார்
காதல் நெஞ்சங்களை
அப்பனும் நோக்க
அடுத்தவனும்
நோக்க
அலறுமே! நெஞ்சங்கள்
கல்வி யுகத்திலே
கணினி யுகத்திலே
கல்லறைகளில்……
வீடும் சமூகமும்
சாதிசமயப் பண்பாடுகளைச்
சாட்டைகளாய்
அணிந்து கொள்ள
பகுத்தறிவு
கொண்டு விரட்டு!
மலரட்டும் காதல்
மனிதம்
வாழ்த்தும்
மலர்த்தூவி
மேகங்கள் மழைத்துளிகளாய்!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப்
பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
மரபுக் காதலும்! நவீனக் காதலும்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே
என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு
வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன