திங்கள், 28 செப்டம்பர், 2015

நல்லன நோக்கு! புதுமை காணவே!



(இன்னிசை வெண்பாவேறு)
1.      கவிஞரின் கண்களோ கற்பனை தூண்டும்
புவிமிசை யோங்கும் புதுமையாய்! சாவியாம்
ஆடவரின் கண்கள் அழகாள் மயக்குமது
பாடம்கல் பான்மை புரிந்து            
2.      கண்கள் கவினாக காணும் கலைகளைப்
பண்புகள் பல்கிப் புதுக்கவே! தண்மனம்
தூண்டிலாய் நின்னை துளிர்க்கும் துணிந்திடு
விண்ணைத் துளைக்க விரைந்து   
(நேரிசை வெண்பா வேறு)
3.      துணிந்தார் துவழார் துயிலுக்கும் அஞ்சார்
தணியா கனவை தளிர்ப்பார் – துணிவு
மனத்தில் துளிர்க்கவே மாண்பு குணமும்
மனத்தில் தளிர்த்திடு மே!             
(இன்னிசை வெண்பாவேறு)
 4.     கற்க திரும்பவும் கற்க கனிக்குமே
சொற்கள் சுகமாய்ச் சுரக்குமே! நூலில்
துவலாத் துணிவுத் துளிர்க்கத் தளிராம்
குவளை மலர்போலும் கூர்!            
5.      ஆய்வாளன் கண்கள் அறிவியல் நோக்குமே!
ஆய விடுத்தால் அறியும் பயன்நூறு!
போக்கிரி பண்பு பொலிந்தால் பொசுங்குமே
ஆக்கும் திறனை அருந்து!               
6.      தம்பி தமக்கை தளிர்க்கல்வி கற்றிடவே
தும்பி யதுபோல் துருவுமே! – நம்பிக்கை
ஓம்ப துளிர்க்கும் ஒருநெஞ்சம் பற்றுகவே
நம்பு நலம்தரும் நீந்து                     
முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                   இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி,
                                                                   கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                   9600370671


நல்லன நோக்கு! புதுமை காணவே!  எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

3 கருத்துகள்:

  1. வெண்பாக் கடலில் விளைந்தநல் முத்துக்கள்
    மண்பால் மலர்ந்த மணப்பூக்கள் - விண்தங்கி
    ஓங்கு கதிர்போல ஓயா இருள்விலக்கித்
    தாங்குக என்றும் தமிழ்.

    அருமையான வெண்பாக் கதம்பம்.

    போட்டியில் வெல்ல வாழ்த்துகள் ஐயா.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன