வியாழன், 1 அக்டோபர், 2015

முற்றம்


மாலை மயங்கி
மலரும் வாடி
மழலைகள் ஆட
மயங்கும் வானம்!

ஊரார் உறங்க
ஊர்ப்பெண் சங்கதி
மறைவாய் அம்பல்!

அம்பல் அடங்குமுன்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததே!
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததே!
அழகு ஆடல்
மலையைத் தழுவும் 
மேகங்கள் முழங்க...

வானத்திரி வருது! மயிலாட வருது!
ஏந்திரி வருது! எதுக்க நின்னு
கதக்க வாய பொள...

கலைகள் ஆயிரம்
மனதை மயக்க
குழுப்பண்பும் குதிராய்!

முற்றம்
முள்வேலியாக
சுவராக

சூரிய கிரகணம் ஆனதே! 

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671
      முற்றம்  எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

1 கருத்து:

  1. வணக்கம்.வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...