வண்டுகள் ரீங்கார மிட்டனர்
வளர் பூக்களைக் கண்டு!
ஆடுகள் மெய் சிலிர்த்தனர்
ஆசைதரும் புட்களை உண்டு!
மாடுகள் மகிழ்வு எய்தினர்
மயக்கும் பசுந்தளிர் தின்று!
கிளிகள் கிள்ளைப் பேசினர்
கிணற்றுக் கண்ணாம் பொந்து கண்டு!
மைனாக்கள் மயக்கம் தெளிந்தனர்
மையலார் நட்ட பனை கண்டு!
கோழிகள் குதூகளித்தனர்
காலை வரவைக் கண்டு!
காக்கைகள் கூச்சலிட்டனர்
கருத்து உணவு கண்டு!
மனித சந்துகள் புலம்பின
மயக்கும் மது உண்டு!
மாலையும் மயங்கினர்
மையல்கள் குழுமிடக் கண்டு!
கொண்டவனும் கொக்கரிக்கும்
கொளுந்து உசுப்பிவிடக் கண்டு!
குருதி உறவும்
குதறிப் போகுதே இன்று
அண்ணன் தம்பி
அக்காள் தங்கை
மச்சான் மச்சினி
உறவுகளே ஆக்கும் நின்று
இதை அறியடா மண்டு! மண்டு!!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப் பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
உறவு எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன