[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- இனம் கற்பிப்பகம் (Inam Karppippagam)
- தொல்காபை ஆய்வி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- வினாடி-வினா (Quizzes)
- வினாடி - வினா (TRB, UGC-Quiz)
- பகுதி - 1, 4 தமிழ் வினாடி - வினா
- MiLifeStyle Products
வெள்ளி, 2 அக்டோபர், 2015
வியாழன், 1 அக்டோபர், 2015
முற்றம்
மாலை மயங்கி
மலரும் வாடி
மழலைகள் ஆட
மயங்கும் வானம்!
ஊரார் உறங்க
ஊர்ப்பெண் சங்கதி
மறைவாய் அம்பல்!
அம்பல் அடங்குமுன்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததே!
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததே!
அழகு ஆடல்
மலையைத் தழுவும்
மேகங்கள் முழங்க...
வானத்திரி வருது! மயிலாட வருது!
ஏந்திரி வருது! எதுக்க நின்னு
கதக்க வாய பொள...
கலைகள் ஆயிரம்
மனதை மயக்க
குழுப்பண்பும் குதிராய்!
முற்றம்
முள்வேலியாக
சுவராக
சூரிய கிரகணம் ஆனதே!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப்
பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
முற்றம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே
என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு
வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.
புதன், 30 செப்டம்பர், 2015
மரபுக் காதலும்! நவீனக் காதலும்!
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவர்களைத்தான்
தோழியும் நோக்கினாள்
களவு கனிந்தது
கற்பாய் மலர்ந்தது
நனியுறும் சங்கக்
காதல்!
சீதையும் இராமனும்
சிலிர்த்து
நோக்க
சிறப்பாய்த்
திருமணம் நடத்தி
சீர்பெறச் சிறப்பித்தார்
காதல் நெஞ்சங்களை
அப்பனும் நோக்க
அடுத்தவனும்
நோக்க
அலறுமே! நெஞ்சங்கள்
கல்வி யுகத்திலே
கணினி யுகத்திலே
கல்லறைகளில்……
வீடும் சமூகமும்
சாதிசமயப் பண்பாடுகளைச்
சாட்டைகளாய்
அணிந்து கொள்ள
பகுத்தறிவு
கொண்டு விரட்டு!
மலரட்டும் காதல்
மனிதம்
வாழ்த்தும்
மலர்த்தூவி
மேகங்கள் மழைத்துளிகளாய்!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப்
பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
மரபுக் காதலும்! நவீனக் காதலும்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே
என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு
வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.
திங்கள், 28 செப்டம்பர், 2015
நம் உணவு நல்லுணவு! நலம் தருமே நவில்!
கும்பா குண்டா கூடவே
கம்பு கேப்பை குருதாளி
காணாது போயிற்றே!
நம்பு அதுவே
நலம்தரும் நல்லுணவு!
முன்னோர் எளிய உணவு
பர்க்கரும் பீசாவும்
பானிப் பூரியும்
பிரைடுரைசும்
நூடூல்சும் பரோட்டாவும்
புதுவரவு இன்று!
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இதுதானோ?
சாலையோரம் காட்சியாய்
எளிய உண்டி பவனி வருதே –
நன்று
கண்டு நீபோய் உண்டு
கண்ட நோய்கள் ஓட்டு!
நாக்குச் சுவைதேடும்
நாவடக்கம் கொள்வாய்
நலம்தருமே என்றும்
உரைத்திடு!
விதைத்திடு!!
நலம்பெறட்டும்
நல்லுணவால்
நானிலமும் வளம்பெறவே!
நானில மக்கள்
நலம்பெறவே!
வள்ளுவன் சொன்ன
உழவுச் சிந்தை
ஒளிரட்டுமே!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப்
பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
நம் உணவு
நல்லுணவு! நலம் தருமே நவில்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும்
உறுதியளிக்கிறேன்.
நல்லன நோக்கு! புதுமை காணவே!
(இன்னிசை வெண்பா –
வேறு)
1.
கவிஞரின் கண்களோ கற்பனை
தூண்டும்
புவிமிசை
யோங்கும் புதுமையாய்! சாவியாம்
ஆடவரின்
கண்கள் அழகாள் மயக்குமது
பாடம்கல்
பான்மை புரிந்து
2. கண்கள் கவினாக காணும்
கலைகளைப்
பண்புகள்
பல்கிப் புதுக்கவே! தண்மனம்
தூண்டிலாய்
நின்னை துளிர்க்கும் துணிந்திடு
விண்ணைத்
துளைக்க விரைந்து
(நேரிசை
வெண்பா – வேறு)
3.
துணிந்தார் துவழார்
துயிலுக்கும் அஞ்சார்
தணியா
கனவை தளிர்ப்பார் – துணிவு
மனத்தில்
துளிர்க்கவே மாண்பு குணமும்
மனத்தில்
தளிர்த்திடு மே!
(இன்னிசை வெண்பா – வேறு)
4. கற்க திரும்பவும் கற்க கனிக்குமே
சொற்கள்
சுகமாய்ச் சுரக்குமே! நூலில்
துவலாத்
துணிவுத் துளிர்க்கத் தளிராம்
குவளை
மலர்போலும் கூர்!
5. ஆய்வாளன் கண்கள் அறிவியல்
நோக்குமே!
ஆய
விடுத்தால் அறியும் பயன்நூறு!
போக்கிரி
பண்பு பொலிந்தால் பொசுங்குமே
ஆக்கும்
திறனை அருந்து!
6. தம்பி தமக்கை தளிர்க்கல்வி
கற்றிடவே
தும்பி
யதுபோல் துருவுமே! – நம்பிக்கை
ஓம்ப
துளிர்க்கும் ஒருநெஞ்சம் பற்றுகவே
நம்பு
நலம்தரும் நீந்து
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப்
பேராசிரியர்,
இந்துஸ்தான்
கலை & அறிவியல் கல்லூரி,
கோவை
– 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
நல்லன நோக்கு! புதுமை காணவே!
எனும் தலைப்பில்
எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும்
உறுதியளிக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நாள் 31 - தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு (Automated Answer Sheet Grading using AI)
நாள் 31: தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு - AI மூலம் தானியங்கி மதிப்பெண் & பின்னூட்டம் ...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
ஈங்குஇவள் செய்தி கேள்என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போன்: ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி அணியிழை தன...

