தஞ்சை,
தமிழ்ப்பல்கலைக் கழக இந்திய மொழிகள் மற்றும்
ஒப்பிலக்கியப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் திங்கள் மூன்றாம் நாள் நிகழ்த்தப்
பெறும் அறக்கட்டளைச் சொற்பொழிவு இந்த ஆண்டும் நிகழ்த்தப் பெற்றது. நிகழ்வின் தொடக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்துடன் அத்துறைத் தலைவர் பேரா. இரா. முரளிதரன் அவர்கள் வரவேற்புரை
நல்குமாறு அமைந்தது. மேனாள் மொழியியல் துறைத்தலைவர் பேரா. கி. அரங்கன் அவர்கள் வாழ்த்துரையுடன்
செந்தமிழ்க் காவலர் முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் பெயர் சொல்ல
நிற்பது ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியமே எனவும், அவர் கடமை, காலம் தவறாமையும்
உணர்வுகளுக்குச் சரியான குறியீடாகவும் திகழ்கின்றார் எனவும், இன்று கல்விப்
பணிக்கு ஊதியம் நிறைவு; ஆனால் அதற்குரிய வேலைகளை யாரும் செய்ய முன்வருவதில்லை
எனவும் கூறி அமைந்தார்.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
வெள்ளி, 4 ஏப்ரல், 2014
திங்கள், 24 மார்ச், 2014
கல்வெட்டும் விழிப்புணர்வும்
கல்வெட்டாவது
வரலாற்றிற்கு முதன்மைச் சான்றுகள். அது குறித்த அறிவு தமிழறிந்த அனைவருக்கும்
தேவை. ஏனெனின் வரலாறுகளை மீட்டுருவாக்கி கூறவேண்டுமெனில் நம்முன்னோர் விட்டுச்
சென்ற சான்றுகள் தேவைப்படுகின்றன. அக்கல்வெட்டுக் குறித்த அறிவு மக்களிடையே உள்ளதா
எனில் இல்லை. இருந்திருந்தால் சான்றுகளை அழித்திருக்கமாட்டோம்; அழித்துக்
கொண்டிருக்க மாட்டோம். இக்கல்வெட்டுகளைப் பாதுகாக்க பல்கலைக் கழகங்களும் அரசும் ஓரளவு தான் முயற்சி செய்துள்ளன; செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதனைப் பாதுகாக்க
வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு.
வெள்ளி, 14 மார்ச், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)