கல்வெட்டாவது
வரலாற்றிற்கு முதன்மைச் சான்றுகள். அது குறித்த அறிவு தமிழறிந்த அனைவருக்கும்
தேவை. ஏனெனின் வரலாறுகளை மீட்டுருவாக்கி கூறவேண்டுமெனில் நம்முன்னோர் விட்டுச்
சென்ற சான்றுகள் தேவைப்படுகின்றன. அக்கல்வெட்டுக் குறித்த அறிவு மக்களிடையே உள்ளதா
எனில் இல்லை. இருந்திருந்தால் சான்றுகளை அழித்திருக்கமாட்டோம்; அழித்துக்
கொண்டிருக்க மாட்டோம். இக்கல்வெட்டுகளைப் பாதுகாக்க பல்கலைக் கழகங்களும் அரசும் ஓரளவு தான் முயற்சி செய்துள்ளன; செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதனைப் பாதுகாக்க
வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு.
ஒரு
பல்கலைக் கழகம் அல்லது அரசு செய்ய வேண்டிய பணியைக் கல்லூரி செய்ய முன்வந்திருப்பது
பாராட்டுதலுக்குரியது. அது என்ன பணியெனின் கல்வெட்டுக் குறித்த விழிப்புணர்வைப்
பயிலரங்கத்தின்வழி மாணாக்கருக்கு அறிவுறுத்தியமேயாம்.
கல்வெட்டுகளின்
வரலாறும் வாழ்வியலும் என்பதுபயிலரங்கத் தலைப்பு. இத்தலைப்பிலான சொற்பொழிவுகள்
பத்து நாட்கள் கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்(திருச்செங்கோடு, தமிழ்நாடு, இந்தியா) நிகழ்ந்தன.
இப்பயிலரங்களில்
பயிற்று விக்க வந்த பயிற்றுனர்கள் அனைவரும் ஓங்கி ஒலித்த ஒரு குரல் கல்வெட்டுக்
குறித்த விழிப்புணர்வு மாணாக்கர்களுக்குத் தேவை என்பதேயாம். இருப்பினும் அங்குக்
கருத்துரைக்கப் பெற்ற சில கருத்துகள் வருமாறு:
1. கல்வெட்டுகள்
குறித்த வராற்றைக் குறிப்பிடல்.
2. கல்வெட்டுகள்
வராற்றுக்குத் துணைநிற்கும் தன்மையைச் சுட்டுதல்.
3. கல்வெட்டுகள் அவ்வவ்
கால சமூகத்தை வெளிப்படுத்தும் தன்மையைக் குறிப்பிடல்.
4. கல்வெட்டுமொழியை
இலக்கணத்துடன் ஒப்பிடல்.
5. கல்வெட்டைப்
படியெடுக்கும் முறையைக் கற்பித்தல்.
கல்வெட்டுகளைக் காப்போம்! வரலாற்றை மீட்டுருவாக்கத் துணை புரிவோம்!
கல்வெட்டுகளைக் காப்போம்! வரலாற்றை மீட்டுருவாக்கத் துணை புரிவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன