தேனே,
நான் காளியை நசுக்கினேன்;
ஏன் என்று நினைக்கிறாய்?
அந்தப் பாம்பு
உன் அழகான ஜடைப்பின்னுலுக்குப்
போட்டி என்பதால்…
நான் கம்சனின் வில்லை உடைத்தேன்
எதற்கு என்று நினைக்கிறாய்?
அது உன் வடிவான புருவத்திற்குப்
போட்டி என்பதால்…
நான் கோவர்தனமலையை
வேரோடு பிடிங்கினேன்;
ஏன் என்று நினைக்கிறாய்?
அந்த மலை
உன் திடமான முலைகளுக்குப்
போட்டி என்பதால்…
நான் குவளயபீடாவை வருத்தினேன்;
எதற்கு என்று நினைக்கிறாய்?
அந்த யானை
உன் அழகான பின்னிடை அசைவிற்குப்
போட்டி என்பதால்..
தேனே,
தயவுசெய்வு நீயே யோசித்துப்பார்..
அவைகள் உன்னைப் போலவே
அழகாய் இருந்தால்
என்னை வருத்துமா இல்லையா...
ராதிகா சாந்தவனமு (ராதையின்
ஊடலைத் தீர்த்தல்) என்ற தெலுங்கு ஊடல் மாலையில் இருந்து ஒரு
கவிதை.
தெலுங்கு:முத்துப்பழனி, ஆங்கிலம்: B.V.L நாராயண ராவ், தமிழில் ஆ. ஈஸ்வரன்.
19-6-13, 4.30pm, JNU..
தமிழில் நூல் எங்கு கிடைக்கிறது?
பதிலளிநீக்கு