நாலரைக்கு எழுப்ப
நான்கடி தூரமே
கணினியோடு உறவாட கண்திறந்தான் பகலன்
அடுக்குமாடிக் குடியிருப்பு
அதிசயமாய் வேம்பு
மின்னடுப்பு அழுத்தி
மென்னிடை பானை வைக்க
காய் எடுக்கும் நேரத்தில்
கனிக் குழந்தை தூக்கி
நான்கடி தூரமே
கணினியோடு உறவாட கண்திறந்தான் பகலன்
அடுக்குமாடிக் குடியிருப்பு
அதிசயமாய் வேம்பு
மின்னடுப்பு அழுத்தி
மென்னிடை பானை வைக்க
காய் எடுக்கும் நேரத்தில்
கனிக் குழந்தை தூக்கி
காண்வெளி காண
குக்கூ என்றது குயிலே
குக்கூ என்றேன் நானும்
குக்கூ என்றது குயிலே
கனிக்குழந்தை அகமகிழ
குக்கூ என்றாள்
குக்கூ என்றது குயிலே
முகம் தாமரையானது
தோளில் சாய்ந்தபடி
குகூ என்றான்
குகூ இல்லை
குக்கூ என்றாள் திருத்தி
குக்கூ என்றான்
குக்கூ என்றது குயிலே
குக்கூ மட்டும் தொடந்ததே!
- த.நேயக்கோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன