நீங்கள் ஒரு பாடநெறி அல்லது பிற உள்ளடக்கத்தில் சேரும்போது, உடேமி சேவைகள் வழியாக அதைப் பார்க்க உடேமியிடமிருந்து உரிமத்தைப் பெறுவீர்கள், வேறு எந்தப் பயனும் இல்லை. உள்ளடக்கத்தை எந்த வகையிலும் மாற்றவோ மறுவிற்பனை செய்யவோ முயற்சிக்க வேண்டாம். சட்டரீதியான அல்லது கொள்கை காரணங்களால் அல்லது சந்தா திட்டங்கள் வழியாகச் சேருவதால் உள்ளடக்கத்தை முடக்க வேண்டும் என்பதைத் தவிர, உடேமி பொதுவாக உங்களுக்கு வாழ்நாள் அணுகல் உரிமத்தை வழங்குகிறது.
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
ஞாயிறு, 9 மே, 2021
சனி, 8 மே, 2021
தொல்லியல் கலைச்சொற்கள் (Archaeological Terms)
ஞாயிறு, 2 மே, 2021
உடேமியின் பயன்பாட்டு நெறிகள் - கணக்கு
உடேமியில் இணைந்து செயல்பட ஒரு கணக்கு தேவை. அந்தக் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏனென்றால் உங்கள் கணக்குடன் தொடர்புடைய எல்லா செயல்பாடுகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பு. உங்கள் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், எங்கள் ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்வதன் மூலம் தெரியப்படுத்தலாம். உடேமியைப் பயன்படுத்த உங்கள் நாட்டில் ஆன்லைன் சேவைகளுக்கான ஒப்புதல் வயதை நீங்கள் அடைந்திருக்க வேண்டும்.
சனி, 1 மே, 2021
உடேமியின் பயன்பாட்டு விதிமுறைகள்
உடேமி பயன்பாட்டு விதிமுறைகளைக் கடைசியாக ஏப்ரல் 1, 2021 அன்று புதுப்பித்தது.
கற்றல் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதே உடேமியின் நோக்கம். கல்வி உள்ளடக்கத்தை (பயிற்றுநர்கள்) உருவாக்கவும் பகிரவும், அந்தக் கல்வி உள்ளடக்கத்தைக் (மாணவர்கள்) கற்றுக் கொள்ளவும் எங்கும் எவருக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் சந்தை மாதிரியை அதன் பயனர்களுக்கு மதிப்புமிக்க கல்வி உள்ளடக்கத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகக் கருதுகிறது. அனைவரும் இந்தத் தளத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் விதிகள் தேவை. ஆகவே, இந்த விதிமுறைகள் உடேமி வலைத்தளம், உடேமி மொபைல் பயன்பாடுகள், தொலைக்காட்சிப் பயன்பாடுகள், ஏபிஐகள், பிற தொடர்புடைய சேவைகள் ஆகியவற்றில் உள்ள உங்கள் எல்லாச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும்.
புதன், 28 ஏப்ரல், 2021
உடேமியில் தமிழ் மின்பாடங்கள் உருவாக்கும் முறைகள்
முனைவர் த. சத்தியராஜ்
தமிழ் உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் - 641 042
9600370671, sathiyarajt@skacas.ac.in
உடேமி கற்றல்/ கற்பித்தல் செயல்பாடுகளை வழங்கி வருகின்றது. இச்செயல்பாடு வரவேற்கத்தக்கது. இது போன்ற செயல்பாடுகளால் உலகின் எந்த மூலையிலிருந்தும் கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் எளிதாகின்றது. இந்த அமைப்பு, தமிழில் மின்பாடங்கள் உருவாக்க வழிவகை செய்து தந்துள்ளது. அதனைத் தமிழ் மட்டும் அறிந்தோருக்கு வழிகாட்டுகின்றது இக்கட்டுரை.
அறிவியலும் தொழில்நுட்பமும்: முன்னேற்றம், நெறிமுறைகள், மனித எதிர்காலம் (SCIENCE AND TECHNOLOGY: PROGRESS, ETHICS AND HUMAN FUTURE)
அறிவியல், தொழில்நுட்பம்: முன்னேற்றம், நெறிமுறைகள், மனித எதிர்காலம் கண்டுபிடிப்புகள், தார்மீகப் பொறுப்பு, எதிர்காலச் ...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...