வெள்ளி, 26 ஜூலை, 2024

தமிழ் விக்கிமூலப் பயிற்சி

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக தமிழ் விக்கிமூலப் பயிலரங்கு (Workshop on proofread in Tamil Wikisource) எனும் பொருண்மையிலான பயிற்சி 26.07.2024 அன்று முற்பகல் 10.00 முதல் 12.30 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் பயிற்றுநராக திருமிகு இர.லோகநாதன் (எ) தகவலுழவன்  (விக்கிமீடியர்) அவர்கள் கலந்துகொண்டு, விக்கித் திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலம் கணக்கு உருவாக்கம், நூல்கள் மெய்ப்புத் திருத்தம் போன்ற விக்கிமூல நுட்பங்கள் குறித்துப் பயிற்சியளித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 60 - அடுத்த ஏ5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? - கட்டுரை (How Will AI Change in the Next 5 Years? – An Essay)

நாள் 60 - 5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? (The Future of AI) – இறுதிப் பாடம் 🚀 நாள்...