சனி, 27 ஜூலை, 2024

கோவைக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான விக்கிமூலக் கூடுகை

26.07.2024 அன்று கோவையில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான விக்கி மூலக்கூடுகை நடைபெற்றது. 
இக்கூடுகையில் விக்கிமூலத்தில் அதிகப் பங்களிப்புச் செய்த லோகநாதன் (எ) தகவலுழவன் அவர்களும் பேராசிரியர்களான
முனைவர் ந.இராேஜந்திரன்,
முனைவர் த.சத்தியராஜ்,
முனைவர் பா.கவிதா,
முனைவர் இரா. குணசீலன்,
முனைவர் இரா.நித்யா,
முனைவர் க.பாலாஜி, பேராசிரியர் இரா. அரிகரசுதன், 
முனைவர் ம. மைதிலி, 
முனைவர் வ.காருண்யா, 
பேராசிரியர் லலிதா
திரு. ஸ்ரீதர், ஆகியோரும் இணைந்து
தேவநேயப் பாவாணரின் 52 தொகுதிகளையும் மெய்ப்புப் பார்த்து, மேம்படுத்தி விரைவில் விக்கிமூல மின்நூலகத்தில் தரவு மேம்பாடு செய்வது குறித்தும் அதற்கான திட்டங்கள் குறித்தும் உரையாடினோம்.
தனியார் கல்லூரிகளில் பணி செய்யும் தாங்கள் ஒன்றிணைந்து தமிழுக்காக வேலை செய்வதைப் பார்க்கும்பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் தகவலுழவன்.

பேராசிரியர்கள் விக்கிமூலத் திட்டம் குறித்து இதுவரை என்னென்ன பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன இனிசெய்ய வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்துக் கலந்துரையாடினோம். 
 இந்தப் பணிக்கு அரசு உதவிக்கரம் நீட்டினால் இன்றைய காலகட்டத்தில் பெரிதாக நம்பப்படும் செய்யறிவுக்கான (AI - ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட்) தரவுகளை வெகு விரைவாக விக்கிமூலத் திட்டத்தில் உருவாக்கிவிடலாம் என்பது பேராசிரியர்களின் கருத்தாக அமைந்தது.

வெள்ளி, 26 ஜூலை, 2024

தமிழ் விக்கிமூலப் பயிற்சி

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக தமிழ் விக்கிமூலப் பயிலரங்கு (Workshop on proofread in Tamil Wikisource) எனும் பொருண்மையிலான பயிற்சி 26.07.2024 அன்று முற்பகல் 10.00 முதல் 12.30 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் பயிற்றுநராக திருமிகு இர.லோகநாதன் (எ) தகவலுழவன்  (விக்கிமீடியர்) அவர்கள் கலந்துகொண்டு, விக்கித் திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலம் கணக்கு உருவாக்கம், நூல்கள் மெய்ப்புத் திருத்தம் போன்ற விக்கிமூல நுட்பங்கள் குறித்துப் பயிற்சியளித்தார்கள்.

வெள்ளி, 12 ஜூலை, 2024

அரத்தக் கொடை முகாம்

On July 12, 2024, the Youth Red Cross Society at Sri Krishna Aditya College of Arts and Science, in collaboration with the Coimbatore Government Medical College Hospital Blood Bank, organized a blood donation camp at the College Digital Library. The event was presided over by the principal, Dr. S. Palaniammal. More than 140 students and faculty participated, with 92 units of blood donated. Twenty one volunteers assisted with the event. Youth Red Cross Program Officer Dr. T. Sathiyaraj coordinated the event.

வியாழன், 4 ஜூலை, 2024

சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம்

(கதைக் சுருக்கம்)

இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் நிரம்பிய இவ் வேமாங்கத நன்னாட்டை இராசமாபுரம் என்னும் சிறந்த நகரத்தின்கண்ணிருந்து சச்சந்தன் என்பான் செங்கோலோச்சினன். இம் மன்னர் மன்னன் கட்டிளமையும், பேரழகும், பேராற்றலும், நுண்ணறிவும், வண்மையும், பிறவும் ஒருங்கேயுடையனாய் விளங்கினான். இவன் அருட்குடைத் தண்ணிழலில் வையகம் மகிழ்ந்து வைகியது.

இம் மன்னன் தன் மாமனாகிய விதையநாட்டரசன் மகள் விசயை என்பவளை இனிதின் மணந்தான். விசயை ஒப்பற்ற பேரழகுடையவள்; நற்குணங்கட்கு உறையுள் போன்றவள். கலங்காக் கற்புடைய காரிகை. சச்சசந்தன் இவள் பெண்மை நலத்திற் பெரிதும் ஈடுபாடுடையனாய் அவளை இமைப்பொழுதும் பிரியவியலாதவனாயினன். அவளோடு உடனுறைதற்குத் தன், அரசியற் கடமைகள் இடையூறாதல் கண்டு தன் அமைச்சருள் ஒருவனாகிய கட்டியங்காரனை அழைத்து அரசாட்சியை அவன் பால் ஒப்புவித்துத் தான் உவளகத்தே விசயையோடு நொடிப் பொழுதும் பிரிவிலனாய் உறைந்தின்புற்றனன்.

புதன், 3 ஜூலை, 2024

பைத்தான் நிரலாக்கம் – தமிழில் இலவச இணைய வழித் தொடர் வகுப்பு