வெள்ளி, 6 நவம்பர், 2015

விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்

விகிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு அழகிய அஞ்சல் அட்டைகளை வெல்லுங்கள்! கூடுதல் கட்டுரைகளை உருவாக்கி “விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்” என்ற சிறப்பினைப் பெறுங்கள்!
க்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
WikipediaAsianMonth-ta.svg
ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம்(Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2015 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
விக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது ஐந்து புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.
ஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள் “விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்” என சிறப்பிக்கப்படுவார்கள்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

உறவு


வண்டுகள் ரீங்கார மிட்டனர்
வளர் பூக்களைக் கண்டு!

ஆடுகள் மெய் சிலிர்த்தனர்
ஆசைதரும் புட்களை உண்டு!

மாடுகள் மகிழ்வு எய்தினர்
மயக்கும் பசுந்தளிர் தின்று!

கிளிகள் கிள்ளைப் பேசினர்
கிணற்றுக் கண்ணாம் பொந்து கண்டு!

மைனாக்கள் மயக்கம் தெளிந்தனர்
மையலார் நட்ட பனை கண்டு!

கோழிகள் குதூகளித்தனர்
காலை வரவைக் கண்டு!

காக்கைகள் கூச்சலிட்டனர்
கருத்து உணவு கண்டு!

மனித சந்துகள் புலம்பின
மயக்கும் மது உண்டு!

மாலையும் மயங்கினர்
மையல்கள் குழுமிடக் கண்டு!

கொண்டவனும் கொக்கரிக்கும்
கொளுந்து உசுப்பிவிடக் கண்டு!

குருதி உறவும்
குதறிப் போகுதே இன்று
அண்ணன் தம்பி
அக்காள் தங்கை
மச்சான் மச்சினி
உறவுகளே ஆக்கும் நின்று
இதை அறியடா மண்டு! மண்டு!!

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடுஇந்தியா,
                                                                    9600370671

   உறவு எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன்இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும்போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

கூடுங்கள் பதிவர்களே




நண்பர்களே,
தமிழ் வழி இணைவோமா
புதுகையில் சங்கமிப்போமா
சங்கமித்துத்தான் பார்ப்போமா
புதுகையை புரட்டிப் போட்டுத்தான் காட்டுவோமா
தமிழுலகையே திரும்பிப் பார்க்கத்தான் வைப்போமா


நன்றி

http://karanthaijayakumar.blogspot.com/2015/10/blog-post.html

வியாழன், 1 அக்டோபர், 2015

முற்றம்


மாலை மயங்கி
மலரும் வாடி
மழலைகள் ஆட
மயங்கும் வானம்!

ஊரார் உறங்க
ஊர்ப்பெண் சங்கதி
மறைவாய் அம்பல்!

அம்பல் அடங்குமுன்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததே!
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததே!
அழகு ஆடல்
மலையைத் தழுவும் 
மேகங்கள் முழங்க...

வானத்திரி வருது! மயிலாட வருது!
ஏந்திரி வருது! எதுக்க நின்னு
கதக்க வாய பொள...

கலைகள் ஆயிரம்
மனதை மயக்க
குழுப்பண்பும் குதிராய்!

முற்றம்
முள்வேலியாக
சுவராக

சூரிய கிரகணம் ஆனதே! 

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671
      முற்றம்  எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

புதன், 30 செப்டம்பர், 2015

மரபுக் காதலும்! நவீனக் காதலும்!



அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவர்களைத்தான்
தோழியும் நோக்கினாள்
களவு கனிந்தது
கற்பாய் மலர்ந்தது
நனியுறும் சங்கக் காதல்!

சீதையும்  இராமனும்
சிலிர்த்து நோக்க
சிறப்பாய்த் திருமணம் நடத்தி
சீர்பெறச் சிறப்பித்தார்

காதல் நெஞ்சங்களை
அப்பனும் நோக்க
அடுத்தவனும் நோக்க
அலறுமே! நெஞ்சங்கள்
கல்வி யுகத்திலே
கணினி யுகத்திலே
கல்லறைகளில்……

வீடும் சமூகமும்
சாதிசமயப் பண்பாடுகளைச் 
சாட்டைகளாய் அணிந்து கொள்ள
பகுத்தறிவு கொண்டு விரட்டு!
மலரட்டும் காதல் மனிதம்
வாழ்த்தும் மலர்த்தூவி
மேகங்கள் மழைத்துளிகளாய்!
முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671


மரபுக் காதலும்! நவீனக் காதலும்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.