திங்கள், 16 செப்டம்பர், 2013

தெலுங்கும் அதன் இலக்கணங்களும்


தென்னிந்திய ஆந்திர பிரதேசத்தில் அரசு ஏற்புபெற்ற மொழியாக விளங்குவது தெலுங்கு. இம்மொழிஇந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்று. இது தமிழ்நாடுகர்நாடகம் ஆகிய பிற மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 9,30,00,000 (93மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். இம்மொழி 2008ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிற்கு எழுத்து வடிவிலான இலக்கிய (ஆந்திர மகாபாரதம்) இலக்கண வளங்களின் தொடக்கம் கி.பி.பதினொன்றாம் நூற்றாண்டு என்பது அதன் வரலாறு காட்டும் உண்மை. அதன்பின்பு அதன் வளர்ச்சி அளவிடமுடியாத அளவிற்கு பரந்து விரிந்தது/ விரிந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் அதற்கு முன்பும் இலக்கிய இலக்கண வளங்கள் இருந்தமையையும் சுட்டத் தவறவில்லை. அதன் இலக்கிய வரலாற்றை,
  1. நன்னயருக்கு முற்காலம் - கி.பி 1020 வரை, 2
  2. புராண காலம் - கி.பி 1020 முதல் கி.பி 1400 வரை
  3. ஸ்ரீநாதரின் காலம் - கி.பி 1400 முதல் கி.பி 1510 வரை
  4. பிரபந்த காலம் - கி.பி 1510 முதல் கி.பி 1600 வரை
  5. தெற்கு காலம் - கி.பி 1600 முதல் கி.பி 1820 வரை
  6. நவீன காலம் - கி.பி 1820 முதல் இன்று வரை
எனப் பாகுபடுத்திப் பார்ப்பர்.
 இலக்கண வளத்தின் தொடர்ச்சி ஆந்திரசத்தசிந்தாமணியிலிருந்து தொடங்குகிறது. எவ்விதம் இருப்பினும் அதற்கு முன்பும் ஒரு பரந்துபட்ட இலக்கணமரபு உண்டென்பது அதன் வரலாறு காட்டும் மற்றொரு உண்மை (லலிதா, தெலுகு வியாகரண சரித்திரம், 1996). இக்கட்டுரை தெலுங்கு மொழிக்குரிய இலக்கணங்களை லலிதா அவர்களின் குறிப்புகளைப் பயன்படுத்தித் தமிழில்  பட்டியலிட்டுக்காண்பிக்க முயலுகிறது. 
  இக்கட்டுரை கீற்று இதழில் 9/9/2013(திங்கள்) அன்று வெளியிடப் பட்டுள்ளது. அக்கட்டுரையை மேலும் வாசிக்க:http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24867:2013-09-09-08-21-30&catid=1:articles&Itemid=264 எனவரும் பக்கதிற்குச் செல்லவும்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?

1.0 முகப்பு
ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?
தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.

 இக்கட்டுரை 10. 09. 2013 அன்று பதிவுகள் இணைய இதழில் வெளியிடப் பெற்றதாகும். ஆக, அக்கட்டுரையை மேலும் வாசிக்க: http://www.geotamil.com/pathivukalnew/index.php?view=article&catid=2:2011-02-25-12-52-49&id=1708:2013-09-10-03-09-03&tmpl=component&print=1&layout=default&page= என வரும் இணையப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.




வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வேமனாவின் பார்வையில் பறையர்

வேமனா தெலுங்கு இலக்கியப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சாதிமுறையைக் கண்டித்தவர். இவர் ஆந்திர நாட்டில் இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் கவிகளில் இலக்கணத்தைக் காணவியாலது. இருப்பினும் படிக்கப்படிக்க இன்பம் தருபவை. இவருடைய மணிமொழிள் அவரின் சமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவனவாக உள்ளன. அவற்றுள் சில மணிமொழிகள் பறையர் பற்றிக் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளன. அவை வருமாறு:

பறையன் இறைச்சியைப் புசிக்க
மற்றவர் நெய்(கொழுப்பு) குடிக்கிறாரன்றோ
குலமனைத்தும் ஓர் குலம் என அறிவீர்!
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 49

பறையன் அல்லன் பறையன்
பேச்சு தவறுபவன் பறையன்
அவனைப் பறையன் என்பவன் பறையன்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 50

பறையனை ஏன் இகழ்வது
உடலிலுள்ள இறைச்சி ஒன்றல்லவோ!
அவனுள் ஒளிக்குமவன் குலம் என்ன?
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 51

வைக்கோலைத் தின்னும் பசுவின் இறைச்சியை உண்ணப்
பறையனவன் என்று கூறுவர் மக்கள்.
பன்றி கோழிகளை உண்ணுபவனை நல்லவனென்பர்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 102


பார்வை: சர்மா சி.ஆர்., 1992, வேமன்னாவின் மணிமொழிகள், தெலுங்குப் பல்கலைக் கழகம், ஐதராபாத்து.




   

வியாழன், 12 செப்டம்பர், 2013

அகச்சமயங்கள் ஆறு

1. பாடாணவாத சைவம்
2. பேதாவத சைவம்
3. சிவசமவாதி சைவம்
4. சிவ சங்கிராந்தவாத சைவம்
5. ஈசுவர அவிகாத சைவம்
6. சிவாத்துவித சைவம்

புதன், 11 செப்டம்பர், 2013