செவ்வாய், 26 மார்ச், 2024

ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்பு – முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2024

ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்பு
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் நடைபெறவுள்ளது.  

தொல்காப்பியத்தில் உயர் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்குரிய களமாக இம்மாநாடு அமையவேண்டும் என்பது இம் மாநாட்டின் குறிக்கோளாகும்.

கனடா நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமிழ்த் தொண்டாற்றிவரும் தொல்காப்பிய மன்றமும், தமிழ்நாட்டில், தமிழ்ப் போராளி, பேராசிரியர் இலக்குவனார் பெயரில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்த் தொண்டாற்றிவரும், இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இத்தகையதொரு உலகளாவிய மாநாட்டை, கனடா அறிஞர் பெருமக்களினதும், தமிழ்நாட்டு அறிஞர் பெருமக்களினதும், உலகப் பேரறிஞர்களினதும் ஆதரவுடன் சிறப்புற நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இம் மாநாட்டில், தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும், நேரடியாகவோ இணையவழியாகவோ கலந்து கொண்டு, மாநாட்டின் குறிக்கோளை நிறைவு செய்வதில் உங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இம் மாநாட்டில், தொல்காப்பியம், தொல்காப்பியத் தமிழ், தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியத்திற்கு முன்னைய காலம், தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியத்தின் இடம், பிற்கால இலக்கணத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம், உலக இலக்கணங்களுடனான ஒப்பீடு போன்ற விடயங்களில் ஆய்வுகள் மேற்கொள்வது வரவேற்கப்படுகிறது. எடுத்துக்காட்டாகக் கட்டுரைக் களங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

ஆய்வுக் கட்டுரைக் களங்கள்:

தொல்காப்பியம் / தொல்காப்பியர் / தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியர் தொடர்பான வரலாற்று ஆய்வு
தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் பற்றிய ஆய்வு
தொல்காப்பியப் பாயிர ஆசிரியர்
தொல்காப்பிய அமைப்பு
தொல்காப்பிய வைப்புமுறை
தொல்காப்பிய உரைகள்
தொல்காப்பிய உரையாசிரியர்கள்
தொல்காப்பிய எழுத்திலக்கணக் கோட்பாடுகள்
தொல்காப்பியச் சொல்லிலக்கணக் கோட்பாடுகள்.
தொல்காப்பியப் பொருளதிகாரம்
தொல்காப்பியரின் அகத்திணைக் கோட்பாடுகள்
தொல்காப்பியரின் புறத்திணைக் கோட்பாடுகள்
பொருளதிகாரமும் வாழ்வியலும்
தொல்காப்பியப் பாவியல் கோட்பாடுகள்
தொல்காப்பியத்தில் காதலும் போரும்
தொல்காப்பியத்தில் நிலப் பாகுபாடு
தொல்காப்பியப் பொருளதிகாரமும் இலக்கிய வளர்ச்சியும்
தொல்காப்பிய இலக்கணமும் இன்றைய வளர்ச்சியும்
தொல்காப்பியமும் அரச உருவாக்கமும்
தொல்காப்பியச் செய்யுளியல்
தொல்காப்பியத்தில் அணியிலக்கணம்
மரபியலின் பயன்பாடு
தொல்காப்பியத்தில் இடைச் செருகல்கள்
தொல்காப்பியரின் பிறப்பியலும் இன்றைய கல்விமுறையும்
தொல்காப்பியப் பிறப்பியலும் மொழியியலும்
தொல்காப்பியப் பிறப்பியலும் பாணினீயமும்
தொல்காப்பியத்தில் தொடரியல்
தொல்காப்பியமும் மொழியியல் கோட்பாடுகளும்
தொல்காப்பியச் சமூகம்
தொல்காப்பியர் கால விளிம்புநிலைச் சமூகம்
தொல்காப்பியத் தமிழர்
தொல்காப்பியத் திறனாய்வு
தொல்காப்பியம் – வரலாற்று ஆவணம்
தொல்காப்பிய எழுத்ததிகாரமும் பிற திராவிட மொழிகளும்
திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ்
தொல்காப்பியமும் மலையாளமும்
தொல்காப்பியமும் யப்பானியப் பாடல் மரபும்
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வுரைகள்
இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பு
இவை போன்ற, தொடர்புடைய பிறவும்.

தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

ஆய்வுக் கட்டுரை தொடர்பான வரைக்கட்டுகள் வருமாறு,

ஆய்வுக் கட்டுரைகள் தொல்காப்பியத்துடன் தொடர்புடைய, தொல்காப்பிய இலக்கணவியல், மொழியியல், அறிவியல், வாழ்வியல், வரலாற்றியல் சார்ந்த ஏதாவது ஒரு துறையில் அமையலாம்.
மாநாட்டில் அளிக்கப்படும் கட்டுரைகள் வேறு எவ்விடத்திலும் எக்காலத்திலும் வெளியிடப்படாததாக இருக்கவேண்டும்.
தேர்ந்தெடுத்த ஆய்வுப் பொருள் குறித்து, இதற்கு முன்னர் வெளிவந்த ஆய்வுகள், ஆவ்வாய்வுகளின் முடிவுகளைக் குறிப்பிட்டு, முன் ஆய்விலிருந்து வேறுபட்டோ, தொடர்ச்சியாகவோ, மறுப்பாகவோ, மேம்படுத்துவதாகவோ கட்டுரை அமையவேண்டும். 
தட்டச்சு – கட்டுரைகளை, ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font), 12 உரு அளவில் (Font size), வரிகளுக்கு இடையிலான இடைவெளி (Line spacing) 1.5 இருக்கக் கூடியதாக, மைக்கிறோசாஃபுட்டு சொற்செயலியில் (Microsoft Word) தட்டச்சு செய்து, மைக்கிறோசாஃபுட்டு (Microsoft Word) கோப்பாகவும்  PDF கோப்பாகவும் அனுப்பவேண்டும்.
கோப்பின் பெயர் (File Name): கட்டுரைத் தலைப்பும் அதைத் தொடர்ந்து கட்டுரை ஆசிரியரின் பெயரும் கோப்பின் பெயராக அமையவேண்டும்.
ஆய்வுச் சுருக்கம் (Synopsis): இரண்டு பக்கங்களுக்குள் அடங்குவதாக இருக்க வேண்டும்.  முழுமையான ஆய்வுக் கட்டுரை முப்பது (30) பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஆய்வாளரின் முழுப் பெயர், மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், முகவரி உள்ளிட்ட, கட்டுரையாளர் தொடர்பான குறிப்பு இணைக்கப்பட வேண்டும்.
ஆய்வுச் சுருக்கம் 2024-05-01 இற்கு முன் கிடைக்கக்கூடியதாக அனுப்பப்படவேண்டும்.
ஆய்வுச் சுருக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது பற்றிய அறிவிப்பு கட்டுரையாளர்களுக்கு 2024-05-25 இல் அறிவிக்கப்படும்.
முழுமையான ஆய்வுக் கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதிநாள்: 2024-07-01
அனுப்பப்படும் கட்டுரைகள் யாவும் மூதறிஞர்கள் அடங்கிய குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு, வாசிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 15-08-2024 இல் அறிவிக்கப்படும்.
ஆய்வுச் சுருக்கம், ஆய்வுக் கட்டுரை ஆகியவை அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tolcanada@gmail.com
மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்காக ஒருவருக்கு ஒதுக்கப்படும் நேரம்:  30 மணித்துளிகள்.

கட்டுரை ஒப்படைப்பு: 20 மணித்துளிகள்.
ஐயந்தெளிதல்: 10 மணித்துளிகள்.
மாநாட்டு இறுதிநாள் அன்று தெரிவான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு மலர் வெளியிடப்படும்.

இணைய முகவரி: https://www.tolkappiyam.ca/   மின்னஞ்சல்: tolcanada@gmail.com

மேலதிகத் தொடர்புகளுக்கு (புலனம்) :    +1-647-881-3613 / +1-416-939-9171 / +1-647-850-0152

https://www.tolkappiyam.ca/call4papers/

ஞாயிறு, 10 மார்ச், 2024

நோயில்லா உலகம்

முன்னுரை:

ஆரோக்கியம் என்பது நல்ல உணவைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து தொடங்குகிறது. துரித உணவு போன்ற விரைவான தீர்வுகள் தற்காலிக மகிழ்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்! மாறாக, சரிவிகித உணவுகளில் கவனம் செலுத்தி, ஆரோக்கியமான உணவுபற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்வோம்; மகிழ்ச்சியாக இருப்போம். இந்த மாற்றம், நோயற்ற ஒரு உலகத்திற்கு வழிவகுக்கும். இது சுகாதாரப் பாதுகாப்பின் அழுத்தத்தைக் குறைக்கும். இது தனிப்பட்ட நல்வாழ்வைப் பற்றியது மட்டுமல்ல; பொது நலனையும் உள்ளடக்கியது. தகவலறிந்து உணவுத் தேர்வுகளைச் செய்வதன் மூலம், ஆரோக்கியமான கிரகத்திற்கு நாம் பங்களிப்பதோடு மட்டுமல்லாமல், சுகாதார வளங்களைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதையும் உறுதிசெய்கிறோம். உணவுகுறித்த நமது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து அனைவருக்கும் பிரகாசமான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் நேரம் இது

  1. பாரம்பரிய உணவை உட்கொள்ளுதல், துரித உணவை முற்றிலும் தவிர்த்தல்.

சனி, 9 மார்ச், 2024

இயந்திர உலகமும் உணவுப் போக்கும்

 முன்னுரை

               Travel - Siliconindia

இன்று, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நிறைய வந்துவிட்டன. இவையினால் நமது உலகம் அதிவேகமாக வளர்ந்துவிட்டது. வேலை வாய்ப்புகளும் அதிகரித்துவிட்டன. 

ஆனால், கடந்த பத்து வருடங்களாக, சம்பளம் கூடவேயில்லை! இதனால், பணியாளர்களுக்கு அதிக சம்பளம் தேவை. ஏனென்றால், விலைகள் மிக அதிகமாக உயர்ந்தன! அதிக பணி நேரத்திரக்குப் பணியைச் செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டது. 

வெள்ளி, 8 மார்ச், 2024

பூச்சிக்கொல்லி இல்லா விவசாயம்

முன்னுரை

இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். மக்கள் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் இருக்கிறது அழிந்து போகும் விவசாயத்தை காக்க வேண்டும்.

வியாழன், 7 மார்ச், 2024

கலாச்சார உணவுகள்

 கலாச்சார உணவுகள் :

நம் முன்னோர்கள் இன்று நாம் மறந்துவிட்ட அதே கலாச்சார உணவைக் கொண்டு அழகான கதைகளை உருவாக்கியுள்ளனர். ஓவ்வாயருக்கு அதியமான் நெல்லிக்காயை பரிசாக அளித்தது நாம் அனைவரும் அறிந்த கதை. இந்தப் பழம் உங்களை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வைக்கும் திறன் பெற்றுள்ளது ஆனால் இந்த வகை பழங்களை மறந்து விட்டு இந்த பீட்சா பர்கர் மற்றும் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களைச் சாப்பிட ஆரம்பித்து விட்டோம். எங்களால் முடியும் என்பதற்காகவே இதை நள்ளிரவில் ஆர்டர் செய்கிறோம்.

புதன், 6 மார்ச், 2024

பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களின் போக்கு!

பாரம்பரிய உணவுகளை எப்படி மறந்தோம்?

'வாழ்பதற்காக உண், உண்பதற்காக வாழாதே', என்று ஒரு பழமொழி உள்ளது. காலம் செல்லச் செல்ல நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மறந்துகொண்டிருக்கிறோம். ஏன் உடலுக்கு ஆகாத தின்பண்டங்களிடம் சென்று நம் சுவையான ஆரோக்கியமான தமிழ் பாரம்பரிய உணவுகளை மறுக்கிறார்கள்? ஏன் என்று பார்ப்போம்.

செவ்வாய், 5 மார்ச், 2024

பாரம்பரிய உணவுகளின் மீட்டெடுப்பு!

மீட்டெடுப்பது எப்படி?

பாரம்பரிய உணவுகளில் ஆரோக்கியமும், சுவையும், ஊட்டச்சத்தும் நிரைந்துள்ளது. அப்படிப்பட்ட உணவுகளை நாம் மறந்துவிட்டோம். எப்படி நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பது? எப்படி என்று பார்ப்போம்.

வெள்ளி, 1 மார்ச், 2024

நாடகம் - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இளையோர் சங்கம் மூலம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நாடகத்தின் மூலம் முனைவர் த. திலிப்குமார் (மாற்றுக்களம் தலைவர் & நாடகப் பயிற்றுநர்) அவர்களும் & திருமிகு நந்தகிசோர் அவர்களும் விழிப்புணர்வு தந்தார்கள்.

இடம்: நல்லூர்வயல், கோயமுத்தூர்