திங்கள், 24 மார்ச், 2014

கல்வெட்டும் விழிப்புணர்வும்



கல்வெட்டாவது வரலாற்றிற்கு முதன்மைச் சான்றுகள். அது குறித்த அறிவு தமிழறிந்த அனைவருக்கும் தேவை. ஏனெனின் வரலாறுகளை மீட்டுருவாக்கி கூறவேண்டுமெனில் நம்முன்னோர் விட்டுச் சென்ற சான்றுகள் தேவைப்படுகின்றன. அக்கல்வெட்டுக் குறித்த அறிவு மக்களிடையே உள்ளதா எனில் இல்லை. இருந்திருந்தால் சான்றுகளை அழித்திருக்கமாட்டோம்; அழித்துக் கொண்டிருக்க மாட்டோம். இக்கல்வெட்டுகளைப் பாதுகாக்க பல்கலைக் கழகங்களும் அரசும் ஓரளவு தான் முயற்சி செய்துள்ளன; செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு.

வெள்ளி, 14 மார்ச், 2014

ராதையின் ஊடலைத் தீர்த்தல்


தேனே,
நான் காளியை நசுக்கினேன்; 
ஏன் என்று நினைக்கிறாய்?
அந்தப் பாம்பு
உன் அழகான ஜடைப்பின்னுலுக்குப்
போட்டி என்பதால்
நான் கம்சனின் வில்லை உடைத்தேன்
எதற்கு என்று நினைக்கிறாய்?
அது உன் வடிவான புருவத்திற்குப்
போட்டி என்பதால்
நான் கோவர்தனமலையை
வேரோடு பிடிங்கினேன்;

தனியே நட


உன் குரல் கேட்டும்
யாரும் வரவில்லையானாலும்
டே! மடையா!
தனியே நட
உன்னுடன் சேர்ந்து
யாரும் பேசவில்லையானாலும்,
எல்லோரும்
முகம் திருப்பிக் கொண்டாலும்,
பயந்து நடுங்கினாலும்
டே! மடையா!

மேடை


மூலம் : ஆங்கிலம்
தமிழில் : ஆ. ஈஸ்வரன்

நாங்கள் எங்களின் பெயரால் அமைந்த
எந்த மேடையும் ஏறியதில்லை
நாங்கள் அதற்காக
அழைக்கப்பட்டதும் இல்லை.
எங்களின் நிலம்
எங்களுக்கே சுட்டுவிரலால் சுட்டிக் காட்டப்பட்டது.
அங்கு பயந்தவாறே இரு கால்களையும்
குத்திட்டு அமர்ந்தோம்.

சனி, 1 மார்ச், 2014

கலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள்


அன்பின் ஐந்திணையில் தலைமக்களைப் பற்றி பேசவரும் போதெல்லாம் ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் என்று குறிப்பிடும் பாங்கினைக் காணலாம். தொல்காப்பியர் ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என வரும் நூற்பாவில் ஒத்த கிழவனும் கிழத்தியும் குறித்து விளக்கியுள்ளார். ஆனால் அங்குச் சுட்டப்படும் ஒத்த என்பதற்குரிய விளக்கத்தினை அவர் மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகிறார்.