இளைஞர்களே... வாழ்க நீ இளைஞனே!
உலகத்தின் எதிர்காலத்தை இளைஞர்களே முடிவு செய்யப் போகிறார்கள். தீமைகளுக்கு இரையாகிவிடாமல், உயரிய நெறிகளை உருவாக்கி ஒளிமயமான எதிர்காலத்தைப் படைக்க வேண்டும்.
▼ மேலும் வாசிக்க (இளைஞர்களுக்கான செய்தி)
1. தீமைகளைத் தவிர்த்தல்
- வஞ்சமும் சூதும் நிறைந்த உலகில் சிக்கிக் கொள்ளாமல், பன்றிகளைப் போலச் சேற்றில் புரளும் வாழ்க்கையைத் தவிர்க்க வேண்டும்.
- ஒருமுறை தீமைகளில் பழகிவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம்; எனவே இளமையிலேயே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
- உயர்ந்த குலத்தில் பிறந்ததால் மட்டும் ஒருவன் உயர்ந்த மனிதனாகி விட முடியாது; அவனது செய்கைகளே அவனை உயர்த்தும்.
சிந்தனை வினாக்கள்
1. கர்ம யோகப் பண்பிற்கு ஆசிரியர் கூறும் உதாரணம் என்ன?
விடை: யமன் உயிரைக் கவர வரும் கடைசி மணித்துளி வரையிலும், நிலத்தில் விதை போடும் முதியவரைப் போலச் செயல்புரியும் பண்பை இளைஞர்கள் பெற வேண்டும்.
2. அம்பேத்கரின் சாதனை
- அறிஞர் அம்பேத்கருக்கு ஏற்பட்ட சோதனைகளும் வேதனைகளும் வேறு எவருக்கும் ஏற்பட்டதில்லை.
- இருப்பினும் அவர் போராடித் தன்னைச் சுடச்சுட ஒளிவிடும் பொன்னாக உயர்த்திக் கொண்டார்.
- புதிய சட்டங்களை உருவாக்கும் குழுவில் இடம் பெற்று மாபெரும் சாதனை படைத்தார்.
ஆசிரியர் குறிப்பு
ஆதாரம்: கு. வெ. பாலசுப்ரமணியன், இளைஞர்களே... (பகுதி: வாழ்க நீ இளைஞனே!).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன