மூலம்:
கன்னடம்
தமிழில்:
சே. முனியசாமி
இந்தியாவில் நாலாயிரத்துக்கு
மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. பல மொழிகள் காணப்படினும் அதில் சிறப்பு வாய்ந்தவை
சிலவே. ஏனெனில் பல மொழிகள் பேச்சுமொழிகளாக
காணலாகின்றன. இத்தகைய மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. திராவிட மொழிகளுக்கு தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனிச்சிறப்பு உண்டு. இம்மொழி கர்நாடக மாநிலத்தில் பேசப்படுகிறது. இக்கன்னட மொழியில்
பழமை வாய்ந்த இலக்கிய இலக்கணங்கள் மிகுந்து காணலாகின்றன. இருப்பின் அம்மொழியின் முதல்
கவியாக திகழ்பவர் பம்பா.
. இவரை ஆதி கவி என அழைப்பர்.
இவரது காலம் கி.பி.902-941 ஆகும். வெங்கிமண்டல
வெங்கிப்பளு எனும் ஊரில் பிறந்தவர். அபிராமதேவராயரு அண்ணமப்பே இருவரும் பம்பனின் பெற்றோர்
ஆவார். அபிராமதேவராயரு பிராமணாராக இருந்து பின்பு புத்தமதத்தைத் தழுவியவர்.
பம்பா தேவந்திர முனிகளிடம் கல்வி பயின்று கல்வியில் தேர்ச்சி
ஆனார். கல்வி கற்றதின் பயனாக நூல்களை எழுதினார். அவர் இரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.
அப்படைப்புகளினால் மாககவி எனச் சிறப்பிக்கப் பெற்றார். அதனால் அவரின் புகழும் பரவிற்று.
எழுதிய
இருநூல்கள்
பம்பனால் ஆதிபுராணம் விக்கிரமார்ஜுன விஜயம். ஆதிபுராணத்தை மூன்று மாதங்களில் எழுதி முடித்தார். இது அவரின் புகழை பரவச் செய்தது. அதே போன்று விக்கிரமார்ஜுன
விஜயா எனும் நூலினை ஆறு மாதங்களில் முடித்தார் என்பதும் போற்றத்தக்கதாக அமைந்தது.
ஆதிபுராணம்
ஆதிபுராணம் எனும் நூல் சைன தர்மங்கள் குறித்தெழுந்த பக்தி இலக்கியமாகும்.
இதில் பதினாறு இயல்கள் (அத்தியாயம்) உள்ளன. இந்நூலில் மூல சைன தர்மங்கள் இடம்பெற்றிருப்பதால் ஆதிபுராணம்
என அழைக்கப்படுகின்றது. ஆதித்தீர்த்தங்கரின் வரலாற்றினை எடுத்துக்காட்டும் முகமாக இந்நூல்
அமைகின்றது. ஆதித்தீர்த்தங்கருக்கு ருஷிபநாதன்
எனப் பெயர் உண்டு. மேலும் இது முந்தைய ஜென்மக் கதையும் காணப்படுகின்றது.இதற்கு ’பவாவளி’
என பெயர் உண்டு (பவா - பிறப்பு , வளி - கதை).
ஆதிபுராணத்தில் ஆதிதீர்த்தங்கரின்
(ரிஸபதேவரின்) முன் ஜென்மக் கதை கூறப்பட்டுள்ளது. இதனை பவாவளி என்று அழைப்பர். மேலும் நீலஞ்சனேய நடனம், பாரத போர் காட்சிகள் போன்ற
செய்திகள் இடம் பெற்றுள்ளன.
விக்கிரமார்ஜுன
விஜயம்
பம்பனால் எழுதப்பட்ட மற்றொரு நூல் விக்கிரமார்ஜுன விஜயா. இந்நூல்
கவுர பாண்டவர் கதையினை உள்ளடக்கியது ஆகும். இந்நூலுக்கு பெயரிட்ட முறை அர்ஜுனனின் வெற்றியை
மையமாகக் கொண்டுள்ளது. இருப்பினும் பம்ப பாரதா எனும் பெயரில் இந்நூல் புகழ்பெற்று விளங்கியது.
இந்நூலில் பதினான்கு அத்தியாயங்கள் காணப்படுகின்றன. அரிகேசரி
அவைக்களத்தில் பம்பன் வீரனாகவும், அமைச்சராகவும், கவிஞராகவும் திகழ்ந்துள்ளார். அரிகேசரி
நடத்திய போரில் தோளுக்குத் தோள்கொடுத்து பம்பன் போரிட்டான். இதில் பம்பன் அரிகேசரியோடு அர்ஜுனனை ஒப்புமைப்படுத்தி எழுதியுள்ளார்.
மகாபாரதத்தில் வருகின்ற அனைத்துக் கதை மாந்தர்களை சிறப்பு மிக்கவர்களாகவும்
தம் நூலில் கற்பனையாக வர்ணித்துள்ளர். பிடிவாதத்தில் துரியோதனன், சத்தியத்தில் கர்ணன்,
தைரியத்தில் பீமன், பலத்தில் பலராமன், உயர் சிந்தனையில் பீஷ்மன், வில் வித்தையில் துரோணச்சாரியன்,
சாகசத்தில் அர்ச்சுனன், தர்மத்தில் தர்மன் போன்ற கதாப்பாத்திரங்கள் மனதைத் தொடுமளவிற்குச்
சிறப்பிக்கப்பட்டுள்ளனர். இச்சிறப்புமிகு செய்திகளைக்
கொண்டு அந்நூல் திகழ்வதினால் மகாபாரதத்திற்கு
நிகராக புகழ்ப் பெற்று காணப்பட்டுள்ளது.
பம்பன், மஹாபாரத்தில் வருகின்ற அனைத்துக் கதாப்பாத்திரங்களையும்
பாரபட்சமின்றி கண்ணோக்கியுள்ளார் என்பதற்கு கர்ணனின் கதாபாத்திரமே சாட்சியாகும். அர்ஜுனன்
கதாநாயகனாக இருப்பினும் பம்பன் பார்வையில் கர்ணனே கதாநாயகனாகத் திகழ்ந்துள்ளார். மஹாபாரதக்கதையினை
மனதில் யாராவது நினைப்பாரெனில் அதில் கர்ணனை நினையுங்கள் என பம்பன் கூறுகிறார். இதனாலயே
பம்பனுக்கு கவிதா குணார்வ எனும் விருது
கிடைத்துள்ளது.
பம்பன் எழுதிய கவிதை
எல்லாம் அவர் வாழ்க்கை பயணத்தில் நடந்தவைகளே. அவர் மறைந்தாலும் அவருடைய படைப்புகள்
மறையாமல் சிறந்து காணுகின்றன. ஆதி கவியாகத் திகழ்ந்த அவர் தற்போது மகாகவியாகத் திகழ்கின்றார்.
கன்னடத்தில் உயர் கவித்துவம் பரவக் காரணம் பம்பனே என்று பம்பனுக்குப் பின் வந்த நாகராஜன்
கூறுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன