மூலம்: கன்னடம்
(தினகர தேசாயி)
தமிழில்: சே. முனியசாமி
நேரத்துக்குச்
சொந்தமே ஓ கடிகாராம்
வெள்ளியின்
நிறத்து வட்ட உருவமே
நேரத்தை
அறிவதற்கு நீ ஆதாரம்
டிக்
டிக் நண்பனே டிக் டிக் டிக்
பகலும்
இரவும் ஒன்றாய் பாடும்
எப்பவும்
உழைக்கத் துடிக்கின்ற மனிதன்
காதினை
திருகுவது உனக்கது உணவு
டிக்
டிக் நண்பனே டிக் டிக் டிக்
முகம்
ஒன்றானாலும் பன்னிரண்டு கண்கள்
இரண்டே
கைகள் என்ன விசித்தரம்
எந்திர
புராணத்தின் ராட்சத புத்திரன்
டிக்
டிக் நண்பனே டிக் டிக் டிக்
உனக்கென இருப்பது எப்படி ஓய்வு
ஆனாலும்
முகத்தில் வெளிச்சம் தெரிகிறது
இதுவே
கர்மத்தில் ரகசிய நிலமை
டிக்
டிக் நண்பனே டிக் டிக் டிக்
துடிப்பது
ஒன்றே கூலியின் கர்மம்
துடிக்கவைப்பது
ஒன்றே பணத்தின் தர்மம்
இன்றிருப்பதுவே
கலிகால மர்மம்
டிக்
டிக் நண்பனே டிக் டிக் டிக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன