இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி - மொழித்துறை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இனைந்து நடத்திய “இலக்கணவியல் வரையறைகளும் உள்வாங்கல்களும்” எனும் பொருண்மையிலான உரையரங்கம்
25.09.2017 (திங்கட்கிழமை) அன்று கல்லூரியின் நூலக
அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்
கு.மா.சின்னதுரை அவர்கள் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார். மொழித்துறைத் தலைவர் பேரா.த.திலிப்குமார்
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேரா.கி.அரங்கன், முனைவர் இரா.இராஜா, முனைவர் மா.பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு இலக்கணவியல்
மீக்கோட்பாட்டுச் சிந்தனைகள் தமிழிலக்கணங்களில் ஊடாடியிருக்கும் தன்மைகள் குறித்து
ஆய்வுரை வழங்கினர். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலிருந்து கலந்து கொண்டு பயனடைந்த முதுகலை மாணவர்களும்,
ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களும் பயனுரை
வழங்கினர். முன்னதாக மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் த.அன்புச்செல்வி (தொடக்கவிழாவில்), பேராசிரியர் முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் (நிறைவுவிழாவில்) ஆகியோர் வரவேற்க உரையரங்க ஒருக்கிணைப்பாளர் முனைவர் த.சத்தியராசு நிறைவாக நன்றி கூறினார்.
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- தமிழ் மரபுச் சொல் சரிபார்ப்புக் கருவி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- தமிழ்த் தகுதித் தேர்வு வினாடி-வினா
- இலக்கிய வரலாறு வினாடி-வினா
- இலக்கண வினாடி-வினா
- தமிழ்க் களஞ்சியம் வினாடி-வினா
திங்கள், 25 செப்டம்பர், 2017
செவ்வாய், 6 ஜூன், 2017
அம்பேத்கர்
பாரத நடுவில்
பிறந்த
சாதி
வலியின் பேரிடியே
ஆகாய அகல
அளவாய்
விரிந்துநின்ற
ஆல விருச்சமே
கோடி கோடி
கருப்பர்களின்
முதன்
முதல் தாயே
கடல்வழியினும் உலக
வழியினும்
வழிந்து
முழங்கிய கோசமே
குழந்தையில் யான்
கண்ட
போராட்டத்தின்
வழியினை
அழைத்து அழைத்துக்
காட்டுகிறேன்
ஸ்ரீபுரந்தரதாசர்
மூலம்
- கன்னடம்
தமிழில்
- சே.முனியசாமி
புரந்தரதாசர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் வைணவ பக்தர். புரந்தரகடா எனும் ஊரில் பிறந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் ஆகும். இவர் ஒரு இரத்தின வியாபாரி. ஸ்ரீநிவாசநாயக்கர் புரந்தரதாசர் என மாற்றம் பெற்றதற்கு கதை ஒன்று உள்ளது.
ஸ்ரீநிவாசநாயக்கர் பெரிய செல்வந்தர். ஆனால் பெரும் கஞ்சன். தானம் தர்மம் என ஏழைகளுக்கு ஒரு பிடி காசுக்கூட கொடுக்காதவர். இவருடைய மனைவி சரசுவதிபாய். இவள் கடவுள் பக்தி மிக்கவள்.
வெள்ளி, 2 ஜூன், 2017
கிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்
கிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம். இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவதையும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிற நிறுனங்களில்
மின்னூல் உருவாக்கப்பட்டாலும் கிண்டில் போன்ற சந்தை நிறுவனங்களை நாட வேண்டியிருப்பதால்
இத்தளத்தில் நூல் உருவாக்குவதும் சந்தைப்படுத்துவதும் எளிது. இது ஓர்
அமேசான் சந்தை நிறுவனத்தினது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசானில் நுகர்வோர் நிரம்ப உள்ளமையால் நம் நூல் விற்பனையாவதற்கும் எளிதிலும் எளிது.
எனவே அத்தளத்தில் நூலுருவாக்குவது குறித்து இக்கட்டுரை பேசுகிறது.
திங்கள், 29 மே, 2017
பொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்
Pressbooks, lulu ஆகிய நூல் வெளியீட்டு வரிசையில் அடுத்து நிற்பது, பொபோகோ எனும் நிறுவனம். இந்நிறுவனமும்
இலவசமாக நூல் வெளியிடுவதற்கு
வழிவகை செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தின்வழி
நூல் வெளியிடும் முறைமையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
வியாழன், 18 மே, 2017
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்
2017 (August)
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...