Pressbooks, lulu ஆகிய நூல் வெளியீட்டு வரிசையில் அடுத்து நிற்பது, பொபோகோ எனும் நிறுவனம். இந்நிறுவனமும்
இலவசமாக நூல் வெளியிடுவதற்கு
வழிவகை செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தின்வழி
நூல் வெளியிடும் முறைமையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
உறுப்பினராதல்…
இந்நிறுவனத்தில் உறுப்பினராவதற்கு www.foboko.com
எனும் தளத்திற்குச் சென்று Sign Up என்பதைச் சொடுக்க வேண்டும். அதனைச் சொடுக்கப் பின்வரும் சாளரம் திறக்கும்.
இதில் குறிப்பிட்டுள்ளபடி VIP
Membership, Free Membership ஆகியவற்றுள் எதை வேண்டுமானாலும் தெரிவுசெய்து
உறுப்பினராக இடம்பெறலாம். அவ்வாறு இடம்பெற்ற பிறகு தங்களது பயனர்
பெயர், மறைவெண் ஆகியன தரப்பெற வேண்டும். அவ்வாறு தர அது பின்வருமாறு விரியும்.
இப்படங்களில் தரப்பெற்றுள்ள eBook
title, eBook subtitle, category, second category, your PayPal email, ISBN, eBook,
description ஆகிய குறிப்புகளை நிரப்புதல் வேண்டும். ஏற்கனவே நீங்கள் PDF, Word அமைப்புகளிலோ அல்லது
mobi, eBook அமைப்புகளிலோ நூல் உருவாக்கி இருந்தால் உள்ளீடாகத் தரலாம். அதற்கு upload your eBook from your computer எனும் பகுதியில்
உள்ள choose என்பதைச் சொடுக்கி, கணினியில்
சேமித்து வைத்த கோப்பை உள்ளீடாகத் தரவும். இன்னும் ஒரு குறிப்பைக்
கூறியாக வேண்டும். நீங்கள் ஏற்கனவே ISBN வாங்கி வைத்திருந்தால் அதற்கான இடத்தில் தட்டச்சிடலாம். அப்படி இல்லை எனில் இந்நிறுவனம் வழிகாட்டும் இணையப் பக்கத்திற்குச் சென்றும்
ISBN-யை விலைகொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம். இங்கு
இலவசமாக ISBN தரப்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இறுதியாக ஏற்கனவே உருவாக்கியிருக்கும் நூலிற்கான அட்டைப்படத்தை
have an eBook cover image எனும் பகுதியில் உள்ள choose என்பதைச் சொடுக்கி நூல் அட்டைப்படத்தை உள்ளீடாகத் தரவும். இப்பணிகள் நிறைவுபெற்றவுடன் submit book என்பதைச் சொடுக்கவும்.
இப்பணிகள் முடிந்தவுடன் பின்வரும் குறிப்புகளை ஒவ்வொன்றாக நிரப்புதல்
வேண்டும். அதனைக் காட்டும் வழிமுறைப் படங்கள்வருமாறு:
இறுதியாக,
proceed to checkout என்பதைத் தர தங்கள் நூல் வெளியிடப்பெற்று விடும்.
இவ்வழிமுறை ஏற்கனவே நூலுருவாக்கி வைத்திருப்போருக்குரியது. இனிமேல்தான் தட்டச்சிட வேண்டும் என்போருக்குப் பின்வரும் வழிமுறைகள் உதவலாம்.
அதுபற்றிச் சிறிது விளக்குவோம்.
ஏற்கனவே கூறியுள்ளமை போன்று உறுப்பினரானவுடன், நீங்கள்
write என்பதைச் சொடுக்கப் பின்வரும் சாளரம் தோன்றும்.
அதில் for authors என்பதில்
உள்ள start writing your book எனும் பொத்தானை அழுத்தவும்.
அதன்பின்பு நூற்தலைப்பின் பெயரைக் கொடுக்கும் சாளரம் திறக்கும்.
அதில் நூற்பெயரைத் தந்தவுடன் அடுத்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
அதில் மேற்குறித்த நூற்குறிப்புகள் அடங்கிய பக்கம் தோன்றும்.
அதில் கேட்கப்பெற்றுள்ள குறிப்புகளை நிரப்புதல் வேண்டும்.
இவை செய்தவுடன் save and go to next step என்பதைச்
சொடுக்கவும். அதன்பின்பு இந்நூல் குறித்த முழுமையான குறிப்புகளைத்
தருதல் வேண்டும். அதன்வழிமுறைகளாவன: 1.book basics,
2. Brain storming, 3. cover & images, 4. work desk, 5. review &
publish, 6.earn money, 7. promote. இவற்றுள் இரண்டாவது வழிமுறையான
brain storming என்பது பதின்மூன்று வழிமுறைகளைக் (steps) கொண்ட நீண்ட பகுதி. இதில் ஒவ்வொரு நூலின் தன்மைகளுக்கு
ஏற்ப, குறிப்புகள் கேட்கப்படும். இவற்றை
நிரப்புதல் வேண்டும்.
இவற்றை நிரப்பியவுடன் save
and go to next step என்பதைச் சொடுக்க மறந்துவிடக் கூடாது. இவ்வழிமுறையில் இரண்டாவது படிநிலைதான் The killer sentence. அதனைப்
பின்வரும் படம் காட்டும்.
இதில்தான் நூலை உருவாக்குவதற்கு வழிவகை செய்து தரப்பெற்றுள்ளது.
ஏற்கனவே தட்டச்சு செய்திருந்தால், அதிலிருந்து
வெட்டி (copy) இங்கு ஒட்டலாம் அல்லது அதில் கேட்கப்பட்டிருக்கும்
choose வழிமுறைவழி சொல்லாய்விக் (word) கோப்பை
உள்ளீடு செய்யலாம். அது பின்ருமாறு பதிவேற்றப்படும்.
இதைச் சேமித்த பின்பு, நூலுக்கான அட்டைப்படத்தை உள்ளீடாகத் தருதல் வேண்டும். அதற்கான வழிமுறைப் படம் கீழே தோன்றுவது.
அதன்பிறகு review & publish எனும் பகுதிக்குச் செல்லச்செல்ல, publish your book எனும்
குறிப்பு இடம்பெறும். அதனைக் காட்டும் படம் வருமாறு:
அதனைத் தொடத் தங்கள் நூல் பதிவேற்றமாகி,
வெளியீடாக வருவதற்குச் சிறிது நேரம் ஆகும்.
அதனைக் காட்டும் வழிமுறைப் படம் வருமாறு:
முடிப்பாக,
பொபோகோ மின்பதிப்பகம் மூலம் நூலுருவாக்க முறைமையை அறிந்து கொண்டோம். சில நிறுவனங்கள்
பதிப்பதற்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருந்தாலும், அதிலிருந்து மாறுபட்டே இந்நிறுவனம்
விளங்குகிறது. ஒரு சிறுகதை அல்லது புதினம் பதிப்பிக்க விரும்பினால், அப்படைப்புகளில்
உள்ள பாத்திரங்களைக் குறிப்புகளில் அறிமுகப்படுத்த அறிவுறுத்துகிறது. இம்முறை அந்நூலை
மதிப்பிடுவதற்கான ஓர் எளிய வழி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்வழியும் நூலுருவாக்கிப்
பயன்பெறலாம்.
துணைநின்றது
முனைவர் த.சத்தியராஜ்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்துர் - 28
பயனுள்ள பதிவு. முயற்சிப்பேன்.
பதிலளிநீக்குவந்தமைக்கும் வாசித்தமைக்கும் நன்றி ஐயா. இது போன்ற மின் பதிப்பு பற்றி இரு கட்டுரைகள் இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழில் வெளியிட்டுள்ளேன். அதனையும் வாசித்துப் பயன்பெறுங்கள்.
நீக்குgood efforts
பதிலளிநீக்கு