புதன், 11 அக்டோபர், 2023

ஒரு நாள் தமிழ் விக்கிமூலப் பயிலரங்கு (One day workshop on proofread in Tamil Wikisource)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக ஒரு நாள் தமிழ் விக்கிமூலப் பயிலரங்கு (One day workshop on proofread in Tamil Wikisource) எனும் பொருண்மையிலான பயிற்சி 11.10.2023 அன்று முற்பகல் 10.00 முதல் 3.00 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் பயிற்சி பெறும் மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் பயிற்றுநராக திருமிகு இர.லோகநாதன் (எ) தகவலுழவன்  (விக்கிமீடியர்) அவர்கள் கலந்துகொண்டு, விக்கித் திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலம் கணக்கு உருவாக்கம், நூல்கள் மெய்ப்புத் திருத்தம் போன்ற விக்கிமூல நுட்பங்கள் குறித்துப் பயிற்சியளித்தார்கள். இந்நிகழ்வில் 50-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார்கள்.

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

புறப்பொருள் வெண்பாமாலை - புலியூர்க் கேசிகன் உரை

இன்று தந்தை பெரியார் அரசு கல்லூரியில் நடைபெற்ற புலியூர்க் கேசிகன் நூற்றாண்டு விழாவில் புறப்பொருள் வெண்பாமாலை உரையை இலக்கணவியல் நோக்கில் அணுகிக் கருத்துரைத்தேன். என் கருத்துரைக்கு வலு சேர்க்குமாகப் பேரா. ஆசியதாரா, பேரா.முனீசுமூர்த்தி, பேரா.இளமாறன், பேரா.பாலாஜி, பேரா. பரமசிவன், பேரா.மோரிஸ் ஜாய் ஆகியோரது கருத்துரைகள் அமைந்திருந்தன. கூடுதலாகக் கற்றுக் கொண்டதும் அளவளாவியதும் மகிழ்ச்சியாக இருந்தன.

புதன், 23 ஆகஸ்ட், 2023

ஒத்தைப்பனை - பழமன் (கட்டுரை அமைப்பு)

  • ஒத்தைப்பனை - பழமன்

    • முன்னுரை

    • பழமன் - அறிமுகம்

    • ஒத்தைப்பனை - அறிமுகம்

    • ஒத்தைப்பனை - புதினச் சிறப்புகள்

    • ஒத்தைப்பனை - பன்முகப் பார்வை

      • கதைச் சுருக்கம்

      • கதை மாந்தர்கள்

        • இராமசாமிக் கவுண்டர்

          • முருகையன்

            • காளியம்மாள்

            • செல்லம்

            • சுப்பு

          • சின்னையன்

            • மங்களம்

            • குமார்
        • துளசி

        • தொழிற்சாலை முதலாளி

        • வடிவேலு - செல்லம் மாமன்

      • புதினம் கூறும் கருத்துக்கள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் சமூகம்

      • ஒத்தைப்பனை புதினத்தில் அறக் கருத்துக்கள்

      • ஒத்தைப்பனை இலக்கிய நயம்

      • ஒத்தைப்பனை - கதை மாந்தர் சிறப்புகள்

        • சின்னையன்

        • செல்லம்

        • இராமசாமிக் கவுண்டர்

      • ஒத்தைப்பனை புதினத்தில் வறுமையும் வளமையும்

      • ஒத்தைப்பனை புதினத்தில் பழமொழிகள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் கொங்குச் சொலவடைகள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் கதைக்கள ஊர்கள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் பெண்ணியம்

      • ஒத்தைப்பனை புதினத்தில் ஆசிரியரின் வெளிப்பாடுகள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் உவமையும் உருவகமும்

      • ஒத்தைப்பனை புதினத்தின் அமைப்பு

      • ஒத்தைப்பனை புதினத்தில் தொடக்கம் - உச்சம் - வீழ்ச்சி

      • ஒத்தைப்பனை புதினத்தின் கதைப் புனைவு

      • ஒத்தைப்பனை புதினம் - திறனாய்வு

    • முடிவுரை


திங்கள், 31 ஜூலை, 2023

கவிச்சோலை

நமது ஶ்ரீ கிருஷ்ணா  ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, தொல்லியல் மன்றத்தின் சார்பாகக்  கவிச்சோலை என்ற பொருண்மை கொண்ட தலைப்பில் சிறப்புரை 31.07.23 அன்று பிற்பகல் 1.20 முதல் 2.00மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிணி த்துறை உதவிப் பேராசிரியர் எம். அருண் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவ மாணவிகள் பயன் பெறும் நிகழ்வாக அமைந்தது.

எண்ணும் எழுத்தும்

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"
      நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, பண்பாட்டு மன்றத்தின் சார்பாக, 'எண்ணும் எழுத்தும்'என்ற  பொருண்மையிலான சிறப்புரை  31.07.23 அன்று பிற்பகல் 02. 20 முதல் 03.20 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் S.நரேஷ் குமார் அவர்கள் இயக்குநர்,  அவர்கள்   கலந்துகொண்டு  நமது வாழ்வியலில் எண்ணிற்கும் எழுத்திற்கும் இடையேயான படிநிலைகள் மற்றும் அவற்றால் பெறும் பயன்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...