- அணிமா(ஆன்மாப் போலாதல்)
- மகிமா(பேருக் கொள்ளுதல்)
- கரிமா(இரும்பு மலையினும் கனத்தல்)
- இலகிமா(பஞ்சினும் இலேசாதல்)
- பிராத்தி(வேண்டுவன அடைதல்)
- பிராகாமியம்(நினைத்த போகமெல்லாம் பெறுதல்)
- ஈசத்துவம்(யாவர்க்கும் தேவனாதல்)
- வசித்துவம்(யாவரும் வணங்க நிற்றல்)
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
வியாழன், 5 செப்டம்பர், 2013
அட்டமா சித்தி
புதன், 4 செப்டம்பர், 2013
இந்திய தேசிய உடைமை வங்கிகள்
- அலகாபாத்து வங்கி - கல்கத்தா
- ஆந்திரா வங்கி - ஐதராபாத்து
- இந்தியன் ஓவர்சிசு வங்கி - சென்னை
- இந்தியன் வங்கி - சென்னை
- ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் - புதுதில்லி
- கனரா வங்கி - பெங்களூர்
- கார்ப்பரேசன் வங்கி - உடுப்பி
- சிண்டிகேட் வங்கி - மணிபால்
- செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
- தேனா பாங்க் - பம்பாய்
- நியூ பாங்க் ஆப் இந்தியா - புதுதில்லி
- பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி - அமிர்தசரசு
- பஞ்சாப் நேசனல் பாங்க் - புதுதில்லி
- பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
- பேங்க் ஆப் பரோடா - பரோடா
- பேங்க் ஆப் மகாராட்டிரம் - புனா
- யுனைடெட் கர்சியல் பேங்க் - கல்கத்தா
- யுனைடெட் கர்சியல் பேங்க் ஆப் இந்தியா - கல்கத்தா
- யூனியன் பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
- விஜயா பேங்க் - பெங்களூர்
திங்கள், 2 செப்டம்பர், 2013
எவ்வாறு வாசிக்க வேண்டும்?
பொதுவாக, எப்படிப் படிக்க வேண்டும் என்ற கருத்துக்களை எந்தவொரு தமிழ்த் தொகை நூல்களும் கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் பிராக்கிருதம் போல்வன மொழிகளில் தொகுக்கப் பெற்ற தொகைநூல்கள் அத்தொகை நூல்களை எவ்வாறு வாசிக்கவேண்டும் என சுட்டத் தவறவில்லை எனலாம். இப்பணியைத் தமிழில் இலக்கணங்கள்தான் செய்து வந்தன. இலக்கியங்களில் திருக்குறள் போல்வன கல்வி என்ற தலைப்பில் பதிவு செய்கின்றமையைக் காணலாம்.
பிராக்கிருத மொழியில் எழுதப் பெற்ற நூலே வஜ்ஜாலக்கம். இதனைத் தமிழில் வைரப்பேழை எனக் கூறலாம் என்பார் மு. கு.ஜகந்நாதராஜா. இக்கவித் தொகுப்பில் இடப்பெறுவதே எவ்வாறு ஒரு கவிதை நூலை வாசிக்க வேண்டும் எனும் கருத்தியல். அக்கருத்தியல் வருமாறு:
1. நிறுத்திப் படிக்க இயலாமை, சுவையறியாதிருத்தல், இடமறிந்து படிக்காமை, மூக்கால் வாசித்தல், விரைவாக வாசித்தல், வாய்தவறி வாசித்தல், ஈடுபாடின்மை - இவை படிப்பவரின் குறைபாடுகள் ஆகும்.(28)
2. இயற்சொல், இன்சொல், சந்தம், நடை, மென்மை, தெளிவு, பொருட்புலப்பாடு இவற்றுடன் கூடியதாக பாகதக் கவிதைகளை படிக்கவேண்டும்.(29)
இவ்வாறு இவை வரையறுத்துக் கூறவேண்டிய காரணம் ஒன்றே. அது இன்பத்துக் கவிகள் என்பதாலேயாம்.
ஞாயிறு, 1 செப்டம்பர், 2013
ஆய்வு செய்யப்பெறாத கல்வெட்டு
இராமநாதபுரம் மாவட்டத்தில் மேலமடை எனும் ஊர் உள்ளது. இவ்வூரின் வயல்பகுதியில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றது. இவ்வெழுத்துக்கள் முழுமையும் சிதைந்து விடுவதற்குள் அக்கல்வெட்டு தரக்கூடிய செய்தியை வெளிக்கொணர வேண்டும் என்பதே எம் நோக்கம்.
அக்கல்வெட்டு குறித்த சில தகவலைக் காண்போம். இக்கல்வெட்டில் இடம்பெறும் எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்பொழுது சேதுபதி மன்னர் காலத்துக்கு முன்போ அல்லது பின்போ எழுதப்பட்டதாக இருக்கலாம். இக்கல்வெட்டு இரண்டரை அடி நீளம் கொண்டதாகவும், சற்று சாய்ந்த நிலையிலும் காணப்படுகிறது. அதனுள் சூலாயுதம் படமும் அதற்குக்கீழூம், அக்கல்லின் பக்கவாட்டிலும் அவ்வெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இது அவ்வயலின் நடுவில் உள்ளது. அக்கல்வெட்டு இருந்த இடம் முன்பு மேடாகவும், தற்பொழுது அம்மேடுகள் அகற்றப்பட்டு வயலாகவும் காட்சித் தருகிறது. எனவே கல்வெட்டு ஆராய்ச்சியில் நாட்டமுடையவர்கள் அக்கல்வெட்டுத் தரும் தகவலை வெளிக்கொணர்வார்களாக! இக்கல்வெட்டுக்கு அருகில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதும் கவனத்திற்குரியது.
தகவலாளர்: திருமதி. த. சத்தியராணி நம்பிராஜன்
இங்கு இடம்பெறும் ஒளிப்படங்கள் நேரில் சென்று கைப்பேசியில் பதிவு செய்யப் பெற்றதாகும்.
இங்கு இடம்பெறும் ஒளிப்படங்கள் நேரில் சென்று கைப்பேசியில் பதிவு செய்யப் பெற்றதாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)