கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் ஆகிய துறைகள் இணைந்து ஒருங்கிணைக்கும் 5ஆவது பன்னாட்டு ஆய்வரங்கம் திசம்பர் 12, 2019 அன்று நிகழவுள்ளது. இதின் இனம் இணைய ஆய்விதழும் பங்கேற்கிறது. இனம் பதிப்புக்குழுவால் தெரிவுசெய்யப்பெறும் கட்டுரைகள் இனம் இணையப் பக்கத்தின் சிறப்பு வெளியீட்டுப் பக்கத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இடம்பெற வேண்டும் என எண்ணுபவர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றித் தரம் மிக்க ஆய்வுக் கட்டுரையாக ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கவும். இதற்கு வாய்ப்பளித்த கல்லூரி நிருவாகத்தாருக்கும், முதல்வர் (முனைவர் கார்த்திகேயன்) அவர்களுக்கும், துறைத்தலைவர் அவர்களுக்கும், ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும் நன்றி உரியது.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
திங்கள், 21 அக்டோபர், 2019
சித்திரம் பேசுதடி
காலத்தை வென்றுநிற்கும் மல்லப் பாடி
கற்பாறை குகையொளிரும் சித்தி ரங்கள்
ஞாலத்தின் மூத்தகுடி தமிழர் என்னும்
ஞாயத்தைப் பேசுகின்ற ஆவ ணங்கள்
கோலத்தைக் கண்டின்றும் வியந்து போகக்
கொலுவிருக்கும் பல்லவர்தம் மாமண் டூரும்
சீலமுடன் மாமல்ல புரத்தி ருக்கும்
ஞாயிறு, 6 அக்டோபர், 2019
தமிழ் தேடல்
(6.10.19) இன்று செயங்கொண்ட சோழபுரம் மருத்துவர் இரா.அன்பழகன் அவர்களின் கடின முயற்சியில் உருவாகியிருக்கும் தமிழ் தேடல் வலைத்தளம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்குந்தர்புரம் அன்னை தெரசா மகளிர் பள்ளியில் நிகழ்ந்தது. இவ்வலைத்தளம் ஒரு தொடக்கப் புள்ளி. இதில் 72 நூல்கள் பதிவேற்றம் செய்யப் பெற்றுள்ளது. இவ்வலையேற்றத்தின் சிறப்பு என்னவெனில் படிப்பதற்கு, தேடுவதற்கு, பதிவேற்றுவதற்கு/திருத்துவதற்கு எனக் கட்டமைக்கப்பெற்றுள்ளமை ஆகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)