கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் ஆகிய துறைகள் இணைந்து ஒருங்கிணைக்கும் 5ஆவது பன்னாட்டு ஆய்வரங்கம் திசம்பர் 12, 2019 அன்று நிகழவுள்ளது. இதின் இனம் இணைய ஆய்விதழும் பங்கேற்கிறது. இனம் பதிப்புக்குழுவால் தெரிவுசெய்யப்பெறும் கட்டுரைகள் இனம் இணையப் பக்கத்தின் சிறப்பு வெளியீட்டுப் பக்கத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இடம்பெற வேண்டும் என எண்ணுபவர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றித் தரம் மிக்க ஆய்வுக் கட்டுரையாக ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கவும். இதற்கு வாய்ப்பளித்த கல்லூரி நிருவாகத்தாருக்கும், முதல்வர் (முனைவர் கார்த்திகேயன்) அவர்களுக்கும், துறைத்தலைவர் அவர்களுக்கும், ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும் நன்றி உரியது.
திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், மலேயா பல்கலைக்கழகம், இனம் பன்னாட்டு இணைய ஆய்விதழ், வேர்களைத்தேடி பதிப்பகம், காப்பியம் ஆய்விதழ் இணைந்து நடத்தும்,
“ஐந்தாம் ஆண்டு பன்னாட்டு ஆய்வரங்கம்“
ஆய்வரங்கம் நடைபெறும் நாள் - 12.12.2019
கட்டுரை வழங்க இறுதிநாள் - 25.11.2019
தலைப்பு - இணைய உள்ளடக்கங்கள் - உருவாக்குதலும், பரவலாக்கமும்
ஆய்வு வல்லுநர்கள் - முனைவா் சு. குமரன் உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுநர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பங்குபெறும் துறைகள் - தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல்
நோக்கம் - கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் கணினி நுட்பத்தின் பயன்பாடுகளை மாணவர்களும் ஆசிரியர்களும் அறிந்துகொள்ளத் துணை நிற்றல், பல்வேறு துறைகளிலும் மின் உள்ளடக்கங்களைத் தமிழ் வழியே உருவாக்கி இணையப் பரப்பில் தமிழை வளப்படுத்துதல்.
ஆய்வுக் களங்கள் - வலைப்பதிவு, விக்கிப்பீடியா, குறுஞ்செயலிகள், மென்பொருள்கள், மின்னூல் உருவாக்கம், யுடியூப் சேனல் உருவாக்கம், காணொளி திருத்துமென்பொருள்கள், ஆட்சென்சு போன்ற பல்வேறு களங்களில் கட்டுரைகள் வழங்கலாம்.
கட்டுரைகள் வெளியீடு - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ISBN எண்ணுடன் நூலாகவும்,
இனம் பன்னாட்டு இணைய ஆய்விதழில் கருத்தரங்க சிறப்பு மலராகவும் வெளியிடப்படும்
ஆய்வுக்கோவையில் வெளியிடவிரும்புவோர் தங்கள் கட்டுரைகளை 5 பக்கங்களுக்குள் தக்க சான்றுகளுடன் ஒருங்குறி எழுத்துருவில் வழங்கவேண்டும்.
இனம் பன்னாட்டு இணைய ஆய்விதழில் தங்கள் கட்டுரை இடம்பெறவேண்டுமானால்,
1) இனம் பதிப்புக்குழுவினரால் தெரிவுசெய்யப் பெற்ற கட்டுரைகள் மட்டுமே சிறப்பு வெளியீட்டுப் பகுதியில் இடம்பெறும்.
2) ஆய்வுக்கட்டுரை ஆய்வுநெறியைப் பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.
3) 12 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
4) ஒருங்குறி எழுத்துருவில்
அமைதல் வேண்டும்.
5) தமிழிலும் ஆங்கிலத்திலும் தலைப்பு அமைதல் வேண்டும்.
6) தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுச் சுருக்கம் அமைதல் வேண்டும்.
7) குறிச்சொற்கள் அமைதல் வேண்டும்.
8) துணைநூற் பட்டியல் APA 6th Adition format-இல் அமைதல் வேண்டும்.
9) இனம் உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
10) மதிப்பீட்டாளரின் கருத்தை உரிய திருத்தம் செய்து உரிய நாட்களுக்குள் அனுப்புதல் வேண்டும்.
11) போலியான ஆய்வு எனக் கண்டறியப்பெற்றால் இணையப் பக்கத்திலிருந்து உடனே நீக்கம் பெறும்.
கட்டணம் - பேராளர்கள் - 750, ஆய்வு மாணவர்கள் - 600,
மேலும் விவரங்களுக்கு -
தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் -
முனைவா் பு.பிரபுராம் -8248823125
ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் -
திருமதி மேரி மிமிக்களின் ரெக்சில்லா - 8526738364
கணிதத் துறை ஒருங்கிணைப்பாளர் -
திரு.எஸ் ஹரிஹரன் - 9500070766
கணினி அறிவியல் ஒருங்கிணைப்பாளர் -
திரு. கே விஜய் - 9842773857
கணினிப் பயன்பாட்டியல் துறை ஒருங்கிணைப்பாளர் - திரு அருண் ஜோ பாப்லு 9994170015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன