[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- தமிழ் மரபுச் சொல் சரிபார்ப்புக் கருவி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- தமிழ்த் தகுதித் தேர்வு வினாடி-வினா
- இலக்கிய வரலாறு வினாடி-வினா
- இலக்கண வினாடி-வினா
- தமிழ்க் களஞ்சியம் வினாடி-வினா
செவ்வாய், 17 ஜூன், 2014
ஏருழவு - நேரிசை ஆசிரியப்பா
சாணம் தெறித்த வாசலில்
பூச்சூடி
சாந்து வைத்து புதுப்பெண்
ணாகக்
காட்சித் தந்திட காளைகள்
மூவிரு
கம்பீ ரமாக
நின்றிட கழுத்திலே
ஒய்யா ரமாய்வீற்
றிருக்கும் ஏரே
வயல்வந் தவுடனே ஆண
மங்கே
வயல்மண் ணுள்ளே
சென்றிட அறுவர்
வரிசை மாறா துழுதி
டுவாரே
வரிசை மாறா
சால்கள் அழகாய்
வானவி லொத்த
நெளிவாய்
அமைந்தி டுமீர்
வரப்புக் கிடையிலே - நேயக்கோ
திங்கள், 16 ஜூன், 2014
அருகிவரும் குதிர்ப் பயன்பாடு

இன்று
அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப்
பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும்
இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது
நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும்
கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது.
அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது.
இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது.
குதிர்
எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என
அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம்
தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து
வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக்
கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு
பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான்.
சனி, 17 மே, 2014
புதன், 7 மே, 2014
தாமோதரர்கள்
கள்
எனும் ஈற்றை இணைத்து தாமோதரர்கள் எனத் தலைப்பிட்டமையின் காரணம் என்னவெனின் தமிழின்
குறுந்தொகையில் தாமோதரனார் பெயருடைய புலவரும், பிராகிருதத்தின் காதா சப்த சதியில்
தாமோதரன் பெயருடைய புலவரும் இடம்பெறுவதேயாம். இவ்விரு மொழிப் புலவர்களும்
பெயரளவில் ஒப்புமையுடையவர்கள். ஆயின் அவ்விருவர்களின் பாடல்களிலும் ஒருமித்த
சிந்தனைகள் நிலவுகின்றனவா? என இக்கட்டுரை நோக்குகின்றது.
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இணையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே – குறுந். 92
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...


