செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

தமிழ்விடு தூது - மதுரைச் சொக்கநாதர்

தமிழ்விடு தூது - (முதல் 25 கண்ணிகள்) 
மதுரைச்சொக்கநாதர் 
கலிவெண்பா

1. சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந் 
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 

2. டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் 
திக்கு விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 

3. செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு 
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 

சனி, 4 பிப்ரவரி, 2023

கடித இலக்கியம் 1

கோயமுத்தூர், 20.07.2016
அன்புக் குழந்தைகளுக்கு,

நீங்கள் வாழும் உலகம் அற்புதமானது. அன்பாய் வாழுங்கள் என்று ஆசிரியன் சொல்வான். அவன் வாழ மாட்டான். ஆய்விற்கு முதன்மை கொடுப்பவன். ஆய்வினால் புத்துலகைப் படைக்க முடியும் எண்ணம் அவனுள். தொல்காப்பியன், சாக்ரடீசு, ஐன்சுடீன், நெப்பொலியன், அலெக்சாண்டர், அம்பேத்கார், அப்துல்கலாம், காமராசர், நல்லக்கண்ணு, கக்கன் எனப் பலபேர் தன்னுள் குடிகொண்டுள்ளனர் என்ற மிதமிதப்பு. சொல்வது உண்மை. செயலில் பொய்மை. அப்படி வாழ நினைக்காதீர் என் அன்புக் குழந்தைகளே...