திங்கள், 30 மே, 2022

அகமே! புறம்… (இராஜ ராஜ சோழன் சரித்திர நாடகத்தின் தழுவல்)

 ஆக்கியோன் : நேயக்கோ (முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி)

கதைமாந்தர்கள்

  • இராசராசன் - சோழ மன்னன்

  • இராசேந்திரன் - இராசராசன் மகன்

  • விமலாதித்தன் - வேங்கி மன்னன்

  • குந்தவி - இராசராசன் மகள்

  • வீரமாதேவி - மதுராந்தகர் தங்கை

  • முத்துப்பல் கவிராயர் - நகைச்சுவைப் புலவர்

  • மேதினிராயர் - நகைச்சுவைப் புலவர்

  • பாலதேவர் - நடமாடும் இராசதந்திரி

  • பூங்கோதை - பணிப்பெண்

  • நாடக ஆசான் - நாடக எழுதியோன்

  • மதுராந்தகர் - அமைச்சர்

சனி, 7 மே, 2022

இராஜராஜசோழன் சரித்திர நாடகம் : நூல் அறிமுகம் Introduction to Raja Raja Chozhan HISTORICAL DRAMA (பகுதி 2)

 நூலாசிரியர் குறிப்பு

விக்கிப் பொதுவகம்
அரு. ராமநாதன், சூலை 7, 1924இல் சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார். படிக்கும் காலங்களிலேயே ஆளுமையாக உருவானவர் என்பதை அவர் எழுதிய சம்சார சாகரம் எனும் படைப்பே சான்றாக அமைகின்றது. இப்படைப்பு அவர்தம் பதினெட்டாம் வயதில் எழுதப்பட்டதாகும். அதன்பின்பு அவர் தன்னை எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், திரைவசன ஆசிரியர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவர் ரதிப்ரியா, கு.நா.ராமையா ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார். இவர் 1945இல் எழுதிய ’ராஜராஜ சோழன்’ நாடகம் ஆயிரம் முறை மேடையேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகையை ஆளுமையின் சில படைப்புகளாக சிந்தனையாளர் பெஞ்சமின், பிராங்கிளின், அறுபது மூவர் கதைகள், குண்டு மல்லிகை, போதிசத்துவர் கதைகள், மதனகாமராஜன் கதைகள், விநாயகர் புராணம், காலத்தால் அழியாத காதல், அசோகன் காதலி, வீரபாண்டியன் மனைவி, அவ்வையார் பொன்மொழிகள், விக்ரமாதித்தன் கதைகள், கிளியோபாட்ரா, சுந்தரரின் பக்தியும் காதலும், வெற்றிவேல் வீரத்தேவன், வேதாளம் சொன்ன கதைகள், பழையனூர் நீலி, மகாகவி பாரதியார் பொன்மொழிகள் ஆகியன அமைந்துள்ளன (விக்கிப்பீடியா, பார்வை நாள் - 13.4.22, https://ta.wikipedia.org/s/75ua).