சனி, 6 ஜூன், 2020

கணித்தமிழ் கற்க/கற்பிக்க வேண்டிய அறிதல்கள்

கணித்தமிழ் என்றால் என்ன?

கணித்தமிழ் என்பது கணினிவழி இயங்கும் தமிழ் எனக் குறிப்பிடலாம். இதை இப்படியும் புரிந்துகொள்ளலாம். கல்லில் எழுதப்பட்ட தமிழ்மொழியைக் கல்வெட்டுத்தமிழ் என்கிறோம். அதுபோலத்தான் கணினியில் எழுதக்கூடிய அல்லது கணினியில் இயங்கக்கூடிய தமிழைக் கணித்தமிழ் என்று இன்று நாம் அழைக்கிறோம். கணினிக்குத் தெரிந்தது 0, 1 என்ற எண் மட்டுமே.

செவ்வாய், 2 ஜூன், 2020

மதிப்பீட்டுரை - தெலுங்கு-தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள்


தமிழும் தெலுங்கும் உறவுடைய மொழிகள். திராவிடத்திலிருந்து இவ்விரண்டும் பிரிந்தது என்பது அறிஞர்கள் கருத்து. திராவிடர் என்றாலே அது தமிழர் எனக் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அறிஞர்கள் பார்வையில் இருந்து வருகிறது. தமிழர்தம் பார்வையில் திராவிடர் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அது இருக்கட்டும் ஆய்வாளர் ஆ.ஈஸ்வரன் ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் ஆகிய ஆய்வுகளை மேற்கொள்ளும் காலத்தும் அதன் பின்பும் மேற்கொண்ட ஆய்வுகளை ஒரு பொருண்மை கருதி தெலுங்கு - தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள் (உறவுநிலை - இலக்கியம் நூலாய்வு) எனும் தலைப்பில் தொகுத்து நூலாக்கியுள்ளார். இம்முயற்சி வரவேற்கத் தக்கதும் பாராட்டுக்குரியதும் ஆகும்.து நிற்க.