வியாழன், 27 ஜூன், 2024

மணிமேகலை - ஆதிரை பிச்சையிட்ட காதை

ஈங்குஇவள் செய்தி கேள்என விஞ்சையர்

பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போன்:

ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்

சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி

அணியிழை தன்னை அகன்றனன் போகிக்

செவ்வாய், 25 ஜூன், 2024

சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை

 மதுரைக் காண்டம் 5. அடைக்கலக் காதை

1
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்க்
கோலின் செம்மையும், குடையின் தண்மையும்,
வேலின் கொற்றமும், விளங்கிய கொள்கை,
பதி எழு அறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மா நகர் கண்டு; ஆங்கு,
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து:
தீது தீர் மதுரையும், தென்னவன் கொற்றமும்,
மாதவத்து ஆட்டிக்குக் கோவலன் கூறுழி