![]() |
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
![]() |
உங்கள் படிப்புகள் உட்பட உடேமி தளத்தில் இடுகையிடும் உள்ளடக்கத்தின் உரிமையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். பிற வலைத்தளங்களில் விளம்பரம் மூலம் விளம்பரப்படுத்துவது உட்பட எந்தவொரு ஊடகத்தின் மூலமும் உங்கள் உள்ளடக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் பணம் செலுத்தும் போது, சரியான கட்டண முறையைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் உள்ளடக்கத்தில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், பெரும்பாலான உள்ளடக்க வாங்குதல்களுக்கு 30 நாள் பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது கடன் வழங்குதல் எனும் முறைமையை உடேமி பின்பற்றுகிறது.
நீங்கள் ஒரு பாடநெறி அல்லது பிற உள்ளடக்கத்தில் சேரும்போது, உடேமி சேவைகள் வழியாக அதைப் பார்க்க உடேமியிடமிருந்து உரிமத்தைப் பெறுவீர்கள், வேறு எந்தப் பயனும் இல்லை. உள்ளடக்கத்தை எந்த வகையிலும் மாற்றவோ மறுவிற்பனை செய்யவோ முயற்சிக்க வேண்டாம். சட்டரீதியான அல்லது கொள்கை காரணங்களால் அல்லது சந்தா திட்டங்கள் வழியாகச் சேருவதால் உள்ளடக்கத்தை முடக்க வேண்டும் என்பதைத் தவிர, உடேமி பொதுவாக உங்களுக்கு வாழ்நாள் அணுகல் உரிமத்தை வழங்குகிறது.
உடேமியில் இணைந்து செயல்பட ஒரு கணக்கு தேவை. அந்தக் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏனென்றால் உங்கள் கணக்குடன் தொடர்புடைய எல்லா செயல்பாடுகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பு. உங்கள் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், எங்கள் ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்வதன் மூலம் தெரியப்படுத்தலாம். உடேமியைப் பயன்படுத்த உங்கள் நாட்டில் ஆன்லைன் சேவைகளுக்கான ஒப்புதல் வயதை நீங்கள் அடைந்திருக்க வேண்டும்.
உடேமி பயன்பாட்டு விதிமுறைகளைக் கடைசியாக ஏப்ரல் 1, 2021 அன்று புதுப்பித்தது.
கற்றல் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதே உடேமியின் நோக்கம். கல்வி உள்ளடக்கத்தை (பயிற்றுநர்கள்) உருவாக்கவும் பகிரவும், அந்தக் கல்வி உள்ளடக்கத்தைக் (மாணவர்கள்) கற்றுக் கொள்ளவும் எங்கும் எவருக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் சந்தை மாதிரியை அதன் பயனர்களுக்கு மதிப்புமிக்க கல்வி உள்ளடக்கத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகக் கருதுகிறது. அனைவரும் இந்தத் தளத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் விதிகள் தேவை. ஆகவே, இந்த விதிமுறைகள் உடேமி வலைத்தளம், உடேமி மொபைல் பயன்பாடுகள், தொலைக்காட்சிப் பயன்பாடுகள், ஏபிஐகள், பிற தொடர்புடைய சேவைகள் ஆகியவற்றில் உள்ள உங்கள் எல்லாச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும்.