குபேந்திரன்
இளம் ஆய்வாளர்
அழகப்பா பல்கலைக் கழகம்
காரைக்குடி
முன்னுரை
சங்க
இலக்கியங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய பாடல்களின்
தொகுப்பாகும். சங்க காலப் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர்
கழார்க் கீரன் எயிற்றியார் ஆவார். பெண்பாற் புலவர்களில்
ஒருவரான இவர் வேட்டுவக் குடியினைச் சார்ந்தவர். இவர் 'கழாஅர்' என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் இவ்வூர்
தற்பொழுது தஞ்சை மாவட்டத்திலுள்ள
திருக்களார் என்றும் சோழர் படைத்தலைவராகிய கீரன் இவர்தம் கணவர் என்பதும்
இவரைப் பற்றிய குறிப்புகளாகும். வேட்டுவக்குடியைச் சார்ந்த
இப்புலவரின் பாடல்கள் வழி இவர்தம் தனித்தன்மையைக் காண்பது இக்கட்டுரையின்
நோக்கமாகும்.