செவ்வாய், 6 ஜூன், 2017

அம்பேத்கர்


பாரத நடுவில் பிறந்த
     சாதி வலியின் பேரிடியே
ஆகாய அகல அளவாய்
     விரிந்துநின்ற ஆல விருச்சமே
கோடி கோடி கருப்பர்களின்
     முதன் முதல் தாயே
கடல்வழியினும் உலக வழியினும்
     வழிந்து முழங்கிய கோசமே
குழந்தையில் யான் கண்ட
     போராட்டத்தின் வழியினை
அழைத்து அழைத்துக் காட்டுகிறேன்

ஸ்ரீபுரந்தரதாசர்

மூலம் - கன்னடம்
தமிழில் - சே.முனியசாமி

      புரந்தரதாசர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் வைணவ பக்தர். புரந்தரகடா எனும் ஊரில் பிறந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் ஆகும். இவர் ஒரு இரத்தின வியாபாரி. ஸ்ரீநிவாசநாயக்கர் புரந்தரதாசர் என மாற்றம் பெற்றதற்கு கதை ஒன்று உள்ளது.
      ஸ்ரீநிவாசநாயக்கர் பெரிய செல்வந்தர். ஆனால் பெரும் கஞ்சன். தானம் தர்மம் என ஏழைகளுக்கு ஒரு பிடி காசுக்கூட கொடுக்காதவர். இவருடைய மனைவி சரசுவதிபாய். இவள் கடவுள் பக்தி மிக்கவள்.

வெள்ளி, 2 ஜூன், 2017

கிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்

      கிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம். இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவதையும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிற நிறுனங்களில் மின்னூல் உருவாக்கப்பட்டாலும் கிண்டில் போன்ற சந்தை நிறுவனங்களை நாட வேண்டியிருப்பதால் இத்தளத்தில் நூல் உருவாக்குவதும் சந்தைப்படுத்துவதும் எளிது. இது ஓர் அமேசான் சந்தை நிறுவனத்தினது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசானில் நுகர்வோர் நிரம்ப உள்ளமையால் நம் நூல் விற்பனையாவதற்கும் எளிதிலும் எளிது. எனவே அத்தளத்தில் நூலுருவாக்குவது குறித்து இக்கட்டுரை பேசுகிறது.