மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
செவ்வாய், 17 ஜூன், 2014
ஏருழவு - நேரிசை ஆசிரியப்பா
சாணம் தெறித்த வாசலில்
பூச்சூடி
சாந்து வைத்து புதுப்பெண்
ணாகக்
காட்சித் தந்திட காளைகள்
மூவிரு
கம்பீ ரமாக
நின்றிட கழுத்திலே
ஒய்யா ரமாய்வீற்
றிருக்கும் ஏரே
வயல்வந் தவுடனே ஆண
மங்கே
வயல்மண் ணுள்ளே
சென்றிட அறுவர்
வரிசை மாறா துழுதி
டுவாரே
வரிசை மாறா
சால்கள் அழகாய்
வானவி லொத்த
நெளிவாய்
அமைந்தி டுமீர்
வரப்புக் கிடையிலே - நேயக்கோ
திங்கள், 16 ஜூன், 2014
அருகிவரும் குதிர்ப் பயன்பாடு
இன்று
அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப்
பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும்
இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது
நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும்
கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது.
அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது.
இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது.
குதிர்
எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என
அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம்
தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து
வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக்
கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு
பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)