
நாடக நிலத்திலிருந்து நண்பர்களுக்கு வணங்களுடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாய் நம் நிலத்தின் கோமாளி தேடிய மணல்மகுடியின் பயணம் மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும் பாறைவெளியில் நவீன ஓவியர்களின் தூரிகையில் கோமாளி முகம் தேடிய கலைமுகாமில் துவங்கி தமிழ் நிலமெங்கும் அலைந்து சூரங்குடி சாமியாட்டம்,தொன் கோயில் சிற்பங்கள் என மணல்மகுடி கலைஞர்கள் திரட்டிய பதிவுகளுடன் சமவெளி கடந்து ஜவ்வாது மலைக்குன்று கூத்துக் கலைஞர்கள், நீலகிரி மலைவாழ் படுகர்கள்,தோடர்கள், இருளர்கள் என ஆதிப் பழங்குடிகளின் மொழி அலையுறும் மலைக்காட்டுக் கருவிகளின் இசை இழுத்து மூச்சாக்கி,கரிசல் நிலத்தின் ஜிம்ளா முயங்களில் நம் நாடக தாத்த சங்கரதாசு சாமிகளின் ஆசி வழி பிரதியாகி ஒத்திகையில் ஆற்றுகை வடிவமாகிக்கொண்டிருக்கிறது.



