சனி, 7 நவம்பர், 2015

நாடக நிலத்திலிருந்து

'மணல்மகுடிக் கலைஞர்களுடன் முருகபூபதி அண்ணன்'
நாடக நிலத்திலிருந்து நண்பர்களுக்கு வணங்களுடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாய் நம் நிலத்தின் கோமாளி தேடிய மணல்மகுடியின் பயணம் மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும்  பாறைவெளியில் நவீன ஓவியர்களின் தூரிகையில் கோமாளி முகம் தேடிய கலைமுகாமில் துவங்கி தமிழ் நிலமெங்கும் அலைந்து சூரங்குடி சாமியாட்டம்,தொன் கோயில் சிற்பங்கள் என மணல்மகுடி கலைஞர்கள் திரட்டிய பதிவுகளுடன் சமவெளி கடந்து ஜவ்வாது மலைக்குன்று கூத்துக் கலைஞர்கள், நீலகிரி மலைவாழ் படுகர்கள்,தோடர்கள், இருளர்கள் என ஆதிப் பழங்குடிகளின் மொழி அலையுறும் மலைக்காட்டுக் கருவிகளின் இசை இழுத்து மூச்சாக்கி,கரிசல் நிலத்தின் ஜிம்ளா முயங்களில் நம் நாடக தாத்த சங்கரதாசு சாமிகளின் ஆசி வழி பிரதியாகி ஒத்திகையில் ஆற்றுகை வடிவமாகிக்கொண்டிருக்கிறது.

'மலைக் கோமாளிகள்...!

இடம்:மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும் பாறைவெளி.'
'மலைக் கோமாளிகள்...!

இடம்:மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும் பாறைவெளி.'
'கோமாளிக் கலை முகாம்...!

இடம்:மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும் பாறைவெளி.'
'மலைக் கோமாளிகள்...!

இடம்:மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும் பாறைவெளி.'
நம் ஆதி மூதாதைகளின் இருள்குகை பாறைக் கோட்டோவியங்கள் முதல் தற்கால மெய்நிகர் படைப்புகள் வரை சமூகம் தன்னை கலைவழியே நிகழ்த்தி உயிர்ப்பித்துக் கொள்கிறது.
கலை எனும் நுண்ணுணர்வை அறிந்து துய்க்க முயலாத எந்தச் சமூகமும் தன்னைத்தானே தற்கொலைக்குள் தள்ளி அழித்துக் கொள்கிறது.
இதனாலேயே ஒரு சமூக இருப்பை அழிக்க முயலும் ஏகாதிபத்தியர்கள்,அதன் கலைகளை அழிப்பதன் வழி அந்த மக்கள் பண்பாட்டை அழித்து இறுதியில் முழுமையாய் ஆக்கிரமிக்கிறார்கள்.
சமூகப் பங்கேற்பும்,காப்பாற்றுதலும் இல்லாத கலையும்,பண்பாடும் அழிந்துபடும் என்பதே வரலாற்றுக் கண்டடைவு.
ஆம்,நண்பர்களே….. தமிழ்ச்சமூகத்தின் தொன் சடங்குகளை; சமூக அவலங்களைச் சாடும் கருவிகளாக்கி தன் நவீன உடல் மொழிமூலம் நாடகவெளியில் கொணர்ந்து செயல்படுத்தும் ”மணல்மகுடி நாடக நிலம்” சமூகப் பங்கேற்பையும், காப்பாற்றுதலையும் வேண்டி நிற்கிறது.
கடந்த மாதம் ஒத்திகை துவங்கி இம்மாத இறுதியில் நாடகநிலம் புகும் ”மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி” நாடகத்திற்கு இசைக்கருவிகள்,உடைகள்,நாடகப்பொருட்கள்,ஒத்திகைச்செலவுகள் என பெரும் பொருளியல் நெருக்கடியில் மணல்மகுடி நிற்கிறது.
இந்த பொருளியல் சுமைகளை பரிமாற தார்மீகமாய் உங்கள் அனைவரையும் எங்களோடு கரம் கோர்த்துக்கொள்ள அன்போடும் வேண்டிக்கொள்கிறோம்.
உதவ விரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தியோ/மின்னஞ்சலில் தொடர்பு கொண்டோ உதவுமாறு வேண்டுகிறோம்.
வங்கி கணக்கு விபரங்கள்:-
Name:S.Boobalan
Acc.No:20000712871
Bank:State Bank Of India
Branch:Selaiyur
IFSC Code:SBIN0007948
தொடர்புக்கு:-
+91-9994122398/+91-9940672857
manalmagudi.art@gmail.com
இந்த வேண்டுதலை உங்கள் நண்பர்கள்,உறவினர்களுடன் பகிர்ந்து மணல்மகுடியின் தொடர்ந்து கலைச்செயல்பாடுகளை முன்னெடுக்க கைகோருங்கள்.
அன்புடன்
மணல்மகுடிக் கலைஞர்கள்.
நன்றி - முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன