திங்கள், 9 நவம்பர், 2015

தமிழறிஞர் முனைவர் துரை. மணிகண்டன்

தெய்வ சுந்தரம் நயினார்'s photo.
முனைவர் துரை. மணிகண்டன் (1973) ... தமிழ் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிற ஒரு துடிப்புள்ள தமிழ் ஆய்வாளர். கணினித்தமிழ் உலகில் வலைப்பூக்கள் மலர்ந்து மணம் தரவேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கில் இடைவிடாது தனது பயிலரங்கப் பயணத்தை மேற்கொண்டுவருபவர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழில் இளங்கலை, முதுகலை , ஆய்வியல் நிறைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். தேசியக் கல்லூரியில் ( பாரதிதாசன் பல்கலைக்கழகம்) 'இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள் ' என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். கணினிப்பிரிவிலும் சான்றிதழ் பெற்றவர். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பேராசியராகத் திருவரங்கத்தில் ( ஸ்ரீரங்கம்) பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றிவருகிறார். தமிழகத்தில் தமிழ் இணையம், வலைப்பூக்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உடைய எவருக்கும் இவரைத் தெரியாமல் இருக்கமுடியாது.
'தமிழ்க்கணினி - இணையப் பயன்பாடுகள்', ' இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்', 'இணையமும் தமிழும்', ' இணையத்தில் தமிழ்வலைப்பூக்கள்' என்று நான்கு சிறந்த நூல்களை இணைய ஆர்வலர்களுக்காக உருவாக்கி வெளியிட்டுள்ளார். மேலும் இரண்டு நூல்களை - ' இலக்கிய இன்பம்', மனித உரிமைச் சிந்தனைகள்' - வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் வலைப்பூக்கள், தமிழ் இணையம், விக்கிபீடியா ஆகிய தலைப்புகளில் சிறப்புரை ஆற்றியும் பயிலரங்குகள் நடத்தியும் உள்ளார். 30-க்கும் மேற்பட்ட தேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்று, தமிழ்தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற உத்தமத்தின் தமிழ் இணையக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரை வழங்கினார். 'அரிமா நோக்கு', ' செந்தமிழ்ச்செல்வி', 'கலைக்கதிர்', 'தமிழ் மாருதம்', ' தி இந்து - தமிழ்) இதழ்களில் 25-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவருடைய ' இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்' என்ற நூலுக்காக 2011-இல் 'படைப்பியல் பட்டயம் ( சிறந்த அறிவியல் நூலுக்கான முதல் பரிசு) ' என்ற விருதைத் திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழுவும் முத்தமிழ் கலைப்பண்பாட்டு மையும் இணைந்து வழங்கின. இவரே ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்களை உருவாக்கி, ( http://manikandanvanathi.blogspot.in,http://manidevi.blogspot.in , http://kapilaparanar.blogspot.in ) தேவையான செய்திகளை அளித்துவருகிறார். இவரைப்பற்றிய தகவல்கள் விக்கீபீடியாவிலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் ஒரு சிறந்த தமிழ்ப் பேராசிரியராக விளங்கும் முனைவர் துரை. மணிகண்டன் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துவோம்.
தெய்வ சுந்தரம் நயினார்'s photo.
தெய்வ சுந்தரம் நயினார்'s photo.தெய்வ சுந்தரம் நயினார்'s photo. 
நன்றி - முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் இலக்கணத் தகவல் களஞ்சியம்

தமிழ் இலக்கணத் தகவல் களஞ்சியம் இலக்கணம் என்றால் என்ன? இலக்கு + அணம் = இலக்கணம். இலக்கு என்றால் கு...