எம்மை சான்றோ னாக்க நினைந்து
தம்மை மெழுகாக்கிக் கொண்ட ஈருள்ளம்
இல்லா ளின்பம் பெறாதும் சென்ற
இன்ப மில்லா அண்டை நாடும்
பொருளீட்டி பொறுப்பாய் வளர்த்த வராயும்
பொருத்திட்ட தந்தை தங்கச் சாமிக்கும்
கேள்வன் குடும்பப் புரித லின்றும்
கேளாத் தன்மை கொண்டும் இருக்க
கருவாடு விற்று பாத்தி மிதித்து
கனிவான வருவா யீட்டி வந்து
இனிய கல்வியைக் கனிய வைத்த
தாய்வசந் தாவுக்கும் இக்கவிகள் தாங்கும்
அன்புப் படைய லாக அமைந்திடும் நூலே!
(கலித்தாழிசை)
- நேயக்கோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன