ஞாயிறு, 9 மார்ச், 2025

அறிவியலின் கொடையும் இழப்பும்

கண்மாய்க் கரையில் பனைகள் நிற்கவே

கண்மதகில் ஈரெறா கம்புக் கிடைதொங்க 

இருவர் முறைமாறி மடைவாய் உள்ளே 

இரைத்திட விருவிரு வெனவாம் நீர்செலுமே

சலசல வெனவாம் இரைச்சல் கேட்க

சற்றே மின்னிச் செல்லும் கெளுத்தி

மீன்கள் துள்ளி யாடிட நண்டும்

நன்னடை பயின்று செலவு தோண்ட

வாய்க்கால் கத்தும் தூயொலி கேட்டுப் 

பிய்ந்தவாய் மறைந்ததே உழுவை வண்டியும்

நீரு றிஞ்சும் வந்திட வயலும்

வாய்க்காலும் பிய்த்துக் கொண்டதே கண்டாய் (நிலைமண்டில ஆசிரியப்பா)

(நன்றி: எழுத்து.காம், 29 ஆகட்டு 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன