சனி, 9 நவம்பர், 2013

தாயின் கண்ணீரும் குமுறலும்


பாலூட்டி சோறூட்டி 
தாலாட்டி சீராட்டி 
என் செல்லத்தை வளர்த்தேனடா 
இழவுக்குப் போய் திரும்ப 
இழவடா எம் இல்லத்து 
மானத்தைப் பறித்த கயவனே 
உயிரையும் அல்லவா பறித்திட்டாயடா 
உன் காம பசிக்கு 
என் செல்லமடா கிடைத்தா 
என் செல்லக் கிளியின் அழுகைக் கேட்டிலையோ 
உன் தங்கை நினைவில்லையோ 
உன் தாயார் நினைவில்லையோ 

என் செல்லத்துக்கு 
உயிருள்ளது அன்புள்ளது 
உனக்கு அது நினைவில்லையோ 
காமத்தை அடக்கியாளத் தெரியாத மூடனே

                                                                                        - நித்யா சத்தியராஜ்
இக்கவிதை 6.11.2013 அன்று எழுத்து இதழில் விளியிடப் பெற்றது. மெய்வேந்து வாசகர்களுக்காக இங்குத் தரப்பெற்றுள்ளது. தங்களது மேலான கருத்தை எழுத்து இதழுக்குச் சென்று தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. http://eluthu.com/kavithai/155341.html 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...