சனி, 2 நவம்பர், 2013

சில்லரை மனிதனடா

எனக்குத் தீபஒளி
ஈழத்தில் வசிக்கும் எம் சொந்தத்திற்கோ
தீராவலி
நான்வேறு அவன்வேறு பிரிக்கவில்லை
மனித உயிர்களை மதிக்கத் தெரியாத பாவிகளே
தமிழனின் ராட்சத உயிர்களை
இரத்தம் உறிஞ்சும் கொடும்பாவிகளே
நீவிர் சில்லரை மனிதர்களடா
எத்தனை எத்தனை இன்னலடா
எத்தனை எத்தனை துயரமடா
எம்மினச் சொந்தங்களுக்கு
எமக்கு வேட்டுச் சத்தம் இன்ப ஒலியோ
இல்லை இல்லை துன்ப ஒலியடா
தேவை இல்லை புத்தாடை
மானத்தை மறைக்க இல்லையடா
ஒரு கிழிந்த ஆடை - எம் சொந்தங்களுக்கு
எண்ணெய் பலகாரம் என்னத்திற்கு
தலையில் தேய்க்க எண்ணெஉ கூட இல்லையடா எம் சொந்தங்களுக்கு
பிச்சைக் காரனுக்குக் கிடைக்கும் சுதந்திரம் கூட இல்லையடா
தமிழன் தானடா வந்தோரை வாழவைக்கும் மாண்புடையவன்
எம் சொந்த தமிழனை வாழ வைக்க யாருமில்லை
எண்ணவைத்து விட்டதடா
இனவேறுபாடு எனும் உம் கொடூர கொலைச் செயல்
இற்றை நாளில் எனக்குத் தீபஒளி அல்ல - அது தீராவலி
                                                                                 - சே. முனியசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன