அக அமைப்பு (Deep Structure) : அக அமைப்பு தொடரமைப்பு. வீதி தோற்றுவிக்கப்பட்ட நுண்குறியீடுகளின் தொடர்ச் சங்கிலி. வாக்கியத்திற்குப் புற அமைப்பு என்ற நிலையும் அக அமைப்பு என்ற நிலையும் உண்டு. வாக்கியத்தின் சொற்களுக்கு இடையே அமைந்த இலக்கண உறவு (எழுவாய் பயனிலை போன்ற உறவுகள்) வரையறுக்கப்படுகின்ற நிலை அக அமைப்பு. பொருளியல் விதிகள் செயல்படுகின்ற தொடரியல் நிலையும் இதுதான்.
அடி(Base) : மாற்றிலக்கணத்தின் ஒரு துணைப் பகுதியை அடி என்று மாற்றிலக்கணத்தார் குறிப்பிடுகிறர்கள். இதை அடிப்பகுதி என்றும் இவர்கள் கூறுவார்கள். அக அமைப்பைத் தோற்றுவிக்கின்ற தொடரமைப்பு விதிகளும் பெயர்வினைப் பாகுபாட்டு விதிகளும் சொற்களஞ்சியமும் அடங்கிய மாற்றிலக்கணத்தின் துணைப் பகுதி இது.
அடிப்பகுதி (Base Component): அடி என்பதும் இதையே குறிக்கும். அக அமைப்பை உருவாக்க உதவக்கூடிய விதிகள் கொண்ட மாற்றிலக்கணத்தின் துணைப் பகுதி இது. மாற்றிலக்கணம் அடிப்பகுதியோடு மாற்றுவிதி பகுதியையும் பொருளியல் பகுதியையும் ஒலியனியல் பகுதியையும் உள்ளடக்கியது. அடிப்பகுதியும் மாற்று விதிப் பகுதியும் தொடரியல் பகுதியின் அங்கங்கள்.
அடிப்படை வாக்கியம் (Kernel Sentence): மொழியில் உள்ள வாக்கியங்கள் ஒன்றற்கொன்று தொடர்புடையவை. தொடர்புடைய வாக்கியங்களுக்கு அடிப்படை வாக்கியம் ஒன்றைத் தொடரியல் விதிகளும் கட்டாய மாற்றுவிதிகளும் தோற்றுவிக்கின்றன. இவ்வடிப்படை வாக்கியத்தின்மீது சிறப்பு மாற்று விதிகள் செயல்படும்பொழுது மற்றைய தொடர்புடைய வாக்கியங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. 1957ல் உருவான மாற்றிலக்கணத்தில் காணப்படுவது இது. இதற்குப் பின்பு உருவான மாற்றிலக்கணத்தில் இக்கருத்து கைவிடப்பட்டது. (பக்.70-71)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன