அறிமுகம்
புறநானூறு, சங்க இலக்கியத்தின் ஒரு முக்கியமான படைப்பு. இது பழந்தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம், போர் முறைகள், வீரம், கொடை, அறம் போன்ற பலவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. எனவே, இந்த ஆய்வின் முதன்மை நோக்கம், புறநானூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளை ஆராய்வது ஆகும். இதற்காக, புறநானூற்றின் இலக்கியக் கூறுகள், வரலாற்றுப் பின்னணி, ஆய்வுகள் போன்றவற்றைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் இங்கே வழங்கப்படுகிறது.
புறநானூற்று இலக்கியத்தைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் ஐங்குறுநூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளையும் இந்த ஆய்வு முன்வைக்கின்றது.
புறநானூற்றுச் சிறப்பு
புறநானூறு, சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும். இதன் பாடல்கள் அகவற்பா வகையைச் சேர்ந்தவை. இப்பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் 400 பாடல்கள் உள்ளன.
புறநானூறு, பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம், போர் முறைகள், வீரம், கொடை, அறம் போன்ற பலவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. இதனால் இது தமிழர் வரலாற்றுப் பெட்டகம், தமிழர் களஞ்சியம், தமிழ் கருவூலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்தப் புறநானூற்றின் சிறப்புகள் பின்வருமாறு:
வரலாற்றுச் சிறப்பு: புறநானூறு, பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம், போர் முறைகள், வீரம், கொடை, அறம் போன்ற பலவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. இதனால் இது தமிழர் வரலாற்றுப் பெட்டகம் என்று அழைக்கப்படுகிறது.
பண்பாட்டுச் சிறப்பு: புறநானூறு, பழந்தமிழர்களின் பண்பாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. இதில் உள்ள பாடல்கள், பழந்தமிழர்களின் வீரம், கொடை, அறம், சீரிய பண்புகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன.
கலைச் சிறப்பு: புறநானூற்றில் உள்ள பாடல்கள், அகவற்பா வகையைச் சேர்ந்தவை. இப்பாடல்கள், பழந்தமிழர்களின் மொழி வளம், கவிதை வளம், கற்பனை வளம் போன்றவற்றை எடுத்துக்காட்டுகின்றன.
புறநானூறு, தமிழிலக்கியத்தில் ஒரு சிறந்த இலக்கியச் சிகரமாக விளங்குகிறது. இது பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதால், இது இன்றும் பலருக்கும் பயனுள்ள ஒரு நூலாகும். இந்த இலக்கியத்தின் சில குறிப்பிடத்தக்க பாடல்கள் வருமாறு:-
ஔவையார் பாடிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடல், பழந்தமிழர்களின் உலகத் தத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
பிரபஞ்சம் பாடிய "வருணனை" என்ற பாடல், பழந்தமிழர்களின் இயற்கை நேயத்தையும் அறிவு வளத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
மதுரைக் காஞ்சி பாடிய "கொங்கு தேர் வாழ்க்கை" என்ற பாடல், பழந்தமிழர்களின் கொங்கு நாட்டு வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டுகிறது.
இவ்விலக்கியம், பழந்தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறந்த ஆவணமாகும். இது இன்றும் பலருக்கும் பயனுள்ள ஒரு நூலாகும் [7].
அச்சு வடிவங்களில் புறநானூறு
அச்சு நூல் வெளிவருவதற்குமுன் நமக்குச் சுவடி, கல்வெட்டு, செப்பேடுகளில்தான் இலக்கியங்கள் கிடைத்து வந்தன. இவ்வாறு கிடைக்கப்பட்ட இலக்கியங்கள் விரும்பிய அல்லது அனைவரின் கரத்திலும் கிடைப்பது என்பது அரிது. அப்படிப்பட்ட நிலையில் அச்சு நூலின் வரவு நமக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. அதிநவீனத் தொழிநுட்பங்கள் வாயிலாக இன்றையச் சூழலில் ஒரே நேரத்தில் ஒரு நூலை ஒருலட்சம் எண்ணிகையிலான படிகளைக்கூட வெளியிடலாம் என்ற நிலை நமக்கு எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி அச்சிட்ட நூல்களைத் துரிதமாக ஆய்வாளர், வாசகர், நூல் விரும்பிகளின் கைகளில் ஒரே நாளில் கிடைக்கச் செய்யுமளவிற்கும் வசதி பெருகிவிட்டது. இதனால் தங்குத் தடையின்றித் தாம் விரும்பிய ஆய்வினை மேற்கொள்ள அச்சு நூல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புறநானூற்று மூலப்பிரதிகள்
1894ஆம் ஆண்டு உ.வே.சா.புறநனூற்றைப் பதிப்பிக்கும் போது புறநானூற்று மூலப்பிரதிகள் 5-ம், உரைப்பிரதிகள் 6-ம் கிடைத்துள்ளன என அ.செல்வராசு சுட்டுகின்றார் (புறநானூறு பதிப்பு வரலாறு, பக்.14,15)
புறநானூற்று மூலப்பதிப்பு
உரைப் பதிப்புகள்
சங்க இலக்கியக் களஞ்சியம் வெளியிட்ட சு.அமிர்தலிங்கம் புறநானூறு பதிப்புகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடுகின்றார் என அ.செல்வராசு சுட்டுகின்றார் (புறநானூறு பதிப்பு வரலாறு, பக்.2,3)
புறநானூறு பதிப்பும் உரையாசிரியரும்
உரைத் தொகுப்புகள்
புறநானூற்றிற்கு இதுவரை நான்கு வகையான உரைகள் வெளிவந்துள்ளதைக் கீழ்க்கண்டவற்றிலிருந்து அறியலாம்.
பெயர் தெரியாப் பழைய உரை
மரபுக் கவிதை வடிவிலான உரை
புதுக்கவிதை வடிவிலான உரை
புதிய உரைகள்
நமக்குக் கிடைத்த உரைகளில் உ.வே.சா. பதிப்பித்த பழைய உரை தெளிவுரையாக அமைந்த உரையாகும். உ.வே.சா-வைப் பின்பற்றி ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை பாடல் தொடரை ஒவ்வொன்றாகப் பிரித்து விளக்கவுரை எழுதியுள்ளார். இவ்விருவருக்கும் பின்னெழுந்த உரையாசிரியர்களான புலியூர்கேசிகன், இரா.மோகன், அர.சிங்கார வடிவேலன், ஞா.மாணீக்கவாசகன், அ.மாணிக்கனார், வ.த.இராமசுப்பிரமணியன், ரா.சீனிவாசன், இரா.இளங்குமரன், வ.குருநாதன், கு.வெ.பாலசுப்பிரமணியன், கி.இராசா, ப.ஆறுமுகம், மணிமேகலைப் பிரசுரம் ஆகியோரின் உரைகள் புதிய உரைகள் எனக் கருதமுடிகின்றன.
புறநானூறு - மொழிபெயர்ப்புகள்
தமிழர்களின் போர் பற்றி விரிவாகக் குறிக்கும் புறநானூறு நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்.
உருது - மு.இரா.சஃப்ரா பேகம், தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்பு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
இந்தி - மா.கோவிந்தராஜன், எட்டுத்தொகை பத்துப்பாட்டு.
தெலுங்கு - தேவ சங்கீதம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு.
கன்னடம் - இரா.சீனிவாசன்
ஆங்கிலம் - ஜி.யூ.போப், Extracts from purananooru
ஆங்கிலம் - ஏ.கே.இராமானுஜம் Sangam poetry: Purananuuru
ஆங்கிலம்- மருதநாயகம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
ஆங்கிலம், Georhe. L.Hart and Hank Heifez The Four Hunder songs of war and wisdom - An Anthology of poems from Classical
ஆங்கிலம் - Mrs. Vaidehi Herberts
இதுபோல் பல்வேறு மொழிப்பெயர்ப்புகள் அச்சின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. கிடைத்தவற்றை இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது.
புறநானூறு பதிப்புகள்
புறநானூறு தொடர்பான பதிப்புகள் 1894ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நமக்கு கிடைக்கின்றன. கால அடிப்படையில் புறநானூற்றுப் பதிப்பு, வெளியீட்டைக் கீழ்க்கண்ட பட்டியலில் காணலாம்.
மேற்சுட்டிய புறநானூறு மூலம், உரை, பதிப்புகள், மொழிபெயர்புகள் என அதிகளவு ஆய்வு செய்யப்பட்டு அச்சு வடிவங்களில் நமக்குக் கிடைத்துள்ளன. இருப்பினும் அச்சு வடிவத்திலிருந்து பிறிதொரு வடிவமாக மின்மயமாக்கம் எனும் வளர்ச்சி படையெடுத்துள்ளது. ஆக, கால மாற்றத்திற்கேற்ப அச்சு நூல்களை மின்னூலாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
விக்கிமூலத்தில் புறநானூறு
புறநானூற்றைப் பொறுத்தவரை விக்கிமூலத்தில் மூன்று நூல்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மூலநூல்களுடன் உள்ளன. மற்றொன்று தட்டச்சு எழுத்தாவண நிலையில் மட்டுமே உள்ளது. அதற்குரிய மூலம் இல்லை [8]. திசம்பர் 31, 2023 நாளில்தான் மூன்று நூல்கள் இருப்பதைக் கண்டறிந்து புறநானூறு எனும் பகுப்பு இடப்பெற்றுள்ளது [8]. இருப்பினும் இன்னும் பதிவேற்றம் தேவைப்படுகின்றது என்பதை மேற்கண்ட குறிப்புகள் வழியே அறிந்துகொண்டிருப்போம். இனி விக்கிமூலத்தில் இடம்பெற்றுள்ள அல்லது உருவாக்க இருக்கும் நூல்களை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
புறநானூறு அட்டவணை மேம்பாடு
புறநானூறு சார்ந்து எழுதப்பெற்ற ஆவணங்கள் அச்சு நூல்களிலேயே முடங்கிவிடக் கூடாது. ஆகவே, அந்த நூல் அட்டவணை கொண்டிருக்க வேண்டிய உள்ளடக்கங்களைப் பின்வருமாறு கட்டமைக்கலாம்.
ஓலைச்சுவடிகளில் புறநானூறு
மூல நூற்சுவடிகள்
உரை நூற்சுவடிகள்
அச்சு நூல்களில் புறநானூறு
மூலநூல்
உரைநூல்
பழைய உரைகள்
உரைவளம்
தற்கால உரைகள்
ஆய்வுநூல்
இந்திய மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
அயல்மொழிமொழி ஒப்பீடு - ஒப்பாய்வு
திராவிட மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
தமிழ் இலக்கிய, இலக்கியங்களுக்கிடையே ஒப்பீடு-ஒப்பாய்வு
மொழியாக்கம்
உலக மொழிகளில்
இந்திய மொழிகளில்
இவ்வாறான வகைப்பாடு காலத்திற்கு ஏற்றதாகும். இதன்படி சிறு முயற்சியைப் பின்வருமாறு பகுத்துப் பார்க்கலாம்.
புறநானூறு நூல் மேம்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்
விக்கிமூலம் கல்விசார் வளங்களை மேம்படுத்தி வரும் கட்டற்ற தளமாக இருப்பதனால் தமிழில் இயற்கை மொழி சார்ந்த ஆய்வுகள் [5] [6] [7] [8] நிகழ்வதற்குப் பெருந்துணை நல்கும். அவ்வாய்வு மட்டுமின்றி உலகப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஆய்வுகள் நிகழ்த்த இத்தளம் ஒரு நூலகமாகவும் செயல்படும். மேலும் இதனால் விளையும் பயன்களை,
புறநானூறு ஆய்வுகள் தொடர்ந்து பலமுறைகளில் நிகழ
இந்திய மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வுகள் எளிதில் நடைபெற
உலக மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வுகள் எளிதில் நடைபெற
இயற்கை மொழி ஆய்வுகளுக்கான தரவுகள் கிடைத்திட
விக்சனரி திட்டங்களில் புறநானூறு சொற்களை ஏற்படுத்த
விக்கித்தரவில் சேர்க்க
விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்க
புறநானூறு தகவல் பெறுவி கருவியை உருவாக்க
புறநானூறு குறித்த மென்பொருள் உருவக்க
புறநானூறு கற்றல் கற்பித்தல் கருவிகளை வடிவமைக்க
என அறியலாம்.
நிறைவாக…
புறநானூறு, தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய படைப்பு. இது பழந்தமிழர்களின் வாழ்வியலைப் பற்றிய ஒரு முழுமையான படத்தைத் தருகிறது. புறநானூறு குறித்த ஆய்வுகள், தமிழ் இலக்கியம், வரலாறு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் மிக முக்கியமானவை. இந்த ஆய்வுகள், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள், பல்வேறு இதழ்கள், நூல்களில் வெளியிடப்படுகின்றன. எனவே, இந்த ஆய்வுகளை ஒரே இடத்தில் குவித்து வைப்பதன் மூலம், அவற்றை எளிதில் அணுக முடியும். இந்த ஆய்வுகள், புறநானூறு குறித்த புதிய புரிதலை உருவாக்க உதவும்.
தமிழ் விக்கிமூலம், ஒரு திறந்த மூல கல்வித் திட்டமாகும். இதன் மூலம், பல்வேறு துறைகளில் உள்ள தகவல்களை, எளிமையான மற்றும் பயனுள்ள வகையில் வழங்க முடியும். ஆகவே, புறநானூற்று ஆய்வுகளை ஒன்றிணைப்பதற்கு, தமிழ் விக்கிமூலம் ஒரு சிறந்த தளமாகும். இதன் மூலம், புறநானூறு குறித்த அனைத்துத் தகவல்களையும், ஒருங்கிணைந்த வடிவில் வழங்க முடியும். அதுமட்டுமின்றி இந்தத் திட்டம், தமிழ் விக்கிமூலத்தை, 72 விக்கிமூலத் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடித் திட்டமாக மாற்றும். மேலும், தமிழ் இலக்கிய வரலாற்றில், விக்கிமூலம் திட்டம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற உதவும்.
துணைநின்றவை
முனைவர் அ.செல்வராசு, புறநானூறு பதிப்பு வரலாறு (1894-2010), 2011, காவ்யா பதிப்பகம், திருச்சி.
புறநானூறு. (2023, அக்டோபர் 3). விக்கிமூலம். Retrieved 13:00, நவம்பர் 10, 2023 from https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81&oldid=1526118.
பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள் - https://ta.wikisource.org/s/b5le
முனைவர் த.சத்தியராஜ், தகவலுழவன், 17 அக்டோபர் 2022, விக்கிமூலமும் தமிழ் இயற்கை மொழி ஆய்வுகளும், கோயமுத்தூர்: இனம் பதிப்பகம்.
முனைவர் த.சத்தியராஜ், முனைவர் ரா.நித்யா, தகவலுழவன், 17 அக்டோபர் 2023, விக்கித்திட்டங்களில் பைத்தான் பயன்பாடு, கோயமுத்தூர் : இனம் பதிப்பகம்.
முனைவர் த.சத்தியராஜ், 2022, தமிழ் விக்கிமூலத்தில் குறுந்தொகைத் தரவு மேம்பாடு (E-content development for Kurunthogai resource in ta.Wikisource) Kalviyiyal Maanaaddu Aaivu Kovai 2021, Thoguthi-2.
Subalalitha Chinnaudayar Navaneethakrishnan, Sathiyaraj Thangasamy, Nithya R, Info-farmer, Neechalkaran, 2022, Exploring the Opportunities and Challenges in Contributing to Tamil Wikimedia International Conference on Speech and Language Technologies for Low-resource Languages.
கட்டுரையாளர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன