புதன், 12 பிப்ரவரி, 2025

வல்லினம் மிகும் இடங்கள்

 

க், ச், (ட்), த், ப், (ற்)

க், ச், த், ப்

தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும்பொழுது கருத்திற்கொள்ள வேண்டுவனபற்றிச் சிறிது காண்போம்.

எழுதும்பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும்; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகா இடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும்; மொழி மரபும் சிதையும்.

எடுத்துக்காட்டாக, யானைத் தந்தத்தால் செய்த பொம்மையைக் குறிப்பிடும்பொழுது தந்தப்பொம்மை என்று வல்லினம் மிக்கு எழுத வேண்டும். அவ்வாறு எழுதாமல் தந்த பொம்மை (வல்லினம் மிகாமல்) என்று எழுதினால், ‘யாரோ ஒருவர் தந்த பொம்மை’ என்று பொருள் மாற்றம் ஏற்பட்டு விடும்.

இது போன்ற பிழை ஏற்படாமல் எழுதிட, வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள்பற்றிய இலக்கண மரபு மாணாக்கருக்குத் தெரிந்திருந்தல் வேண்டும்.

தமிழில் எழுதும்போது ஒற்றுப்பிழை, எழுத்துப்பிழை, சொற்பிழை, தொடர்ப்பிழை, கருத்துப்பிழை, பிறமொழிக் கலப்புப் பிழை, குறியீட்டுப் பிழை, புணர்ச்சி, மரபு, யாப்பு எனப் பல வகைகளில் பிழை ஏற்படுகிறது. இவற்றுள் ஒற்றுப்பிழைக்குக் காரணமாக அமைவது, வல்லின மெய்யாகிய க், ச், த், ப் என்னும் எழுத்துகள். இந்நான்கு வல்லினமெய் எங்கு இடம்பெற வேண்டும், எங்கு இடம்பெறக் கூடாது என்பதைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். படித்தவர்களாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் இந்த வல்லினமெய்களை உரிய இடங்களில் பயன்படுத்துவதில் தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. இவ்வல்லின மெய்கள் எங்கு மிகும்? எங்கு மிகாது? என்பதைப் புரிந்துகொண்டால் ஓரளவாவது பிழையைத் தவிர்க்கலாம்.

வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்
அந்த, இந்த - சுட்டு, எந்த - வினாச் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

நிலைமொழி + வருமொழி

  • க, ச, த, ப வரிசையுடைய சொற்கள்

  • அந்த   +  பையன்  =  அந்த + ப் + பையன் = அந்தப் பையன்

  • இந்த  +  பெட்டி  =  இந்த + ப் + பெட்டி = இந்தப்பெட்டி

  • எந்த + சட்டி = எந்த + ச் + சட்டி = எந்தச் சட்டி

  • அந்தக்காலம்

  • இந்தப் பொருள்

  • எந்தச் சொல்

  • அவ்வகை, இவ்வகை, எவ்வகை - சுட்டுச் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
  • அவ்வகை  +  காடு  =  அவ்வகைக்காடு

  • இவ்வகை  +  தோப்பு  =  இவ்வகைத்தோப்பு

  • எவ்வகை  +  பெயர்  =  எவ்வகைப்பெயர்

  • மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
  • மற்ற  +  கலைகள்  =  மற்றக்கலைகள்

  • மற்று  +  சிலை  =  மற்றுச்சிலை

  • மற்றை  +  பயன்  =  மற்றைப்பயன்

  • “இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.

பால் குடித்தான்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

பாலைக் குடித்தான்.

இரண்டாம் வேற்றுமை விரி

பால் குடம்

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

பாலை உடைய குடம்

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையின் விரி


இரண்டாம் வேற்றுமை உருபு:

இரண்டாம் வேற்றுமை பயன்கள்:

  • செயப்படுபொருள் (Object)

  • காலம் (Time)

  • இடம் (Place)

இரண்டாம் வேற்றுமை உருபான 'ஐ' என்ற உருபை ஏற்றதும் (எழுவாய்) பெயர்ச்சொல்லானது கீழ்க்கண்ட பொருள்களை உணர்த்தும்.

  1. ஆக்கப்படுபொருள் ( ஒன்றை உருவாக்குதல்)

  2. அழிக்கப்படு பொருள் ( ஒன்றை இல்லாமல் செய்தல்)

  3. அடையப்படு பொருள் ( ஒன்றை அடைதல்)

  4. நீக்கப்படு பொருள் (ஒன்றை விட்டு நீங்(க்)குதல்)

  5. ஒத்தல் பொருள். (ஒன்றை மற்றொன்றுடன் ஒப்புமைப் படுத்தல்)

  6. உடைமைப் பொருள்.( உடைமை பெற்றிருத்தல்)

ஆகியனவும் பிறவுமாகும்.

சான்று:

  • குடத்தை வனைந்தான் - ஆக்கப்படுபொருள்.

  • கோட்டையை இடித்தான் - அழிக்கப்படு பொருள்.

  • ஊரை அடைந்தான் - அடையப்படு பொருள்

  • வீட்டை விட்டான் - நீக்கப்படு பொருள்

  • புலியைப் போன்றான் - ஒத்தல் பொருள்

  • பொன்னை உடையான் - உடைமைப் பொருள்.

உடன்தொக்க தொகை என்பது:

  • வேற்றுமை உருபும் பயனும் மறைந்து வருவது

பெயர், ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி - வேற்றுமைகள் உருபுகள்

  • பெயர் - முதல் வேற்றுமை

  • ஐ - இரண்டாம் வேற்றுமை

  • ஆல் - மூன்றாம் வேற்றுமை

  • கு - நான்காம் வேற்றுமை

  • இன் - ஐந்தாம் வேற்றுமை

  • அது - ஆறாம் வேற்றுமை

  • கண் - ஏழாம் வேற்றுமை

  • விளி - எட்டாம் வேற்றுமை

  • 1) இரண்டாம் வேற்றுமை - ஐ

  • 2) மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு

  • 3) நான்காம் வேற்றுமை - கு

  • 4) ஐந்தாம் வேற்றுமை - இன், இல்

  • 5) ஆறாம் வேற்றுமை - அது, ஆது

  • 6) ஏழாம் வேற்றுமை - கண்

    • மோர்   +  குடம்  =  மோர்க்குடம்

    • மலர்  +  கூந்தல்  =  மலர்க்கூந்தல்

    • தயிர்  +  பானை  =  தயிர்ப்பானை

    • தண்ணீர்  +  தொட்டி  =  தண்ணீர்த்தொட்டி

  • இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
    • அவன் + பார்த்தான்

    • அவன் + ஐ + பார்த்தான் = அவனை + பார்த்தான்

    • அவனைப் பார்த்தான்

  • “மூன்றாம் வேற்றுமை உருபும் (ஆல், ஆன், ஒடு, ஓடு) பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.

கருவிப்பொருள், கருத்தாப்பொருள், உடன் நிகழ்ச்சிப் பொருள் ஆகிய மூன்றும் மூன்றாம் வேற்றுமையின் பொருள்கள் ஆகும்.


கத்தியால் வெட்டினான்

கருவிப்பொருள்

நளன்கதை வெண்பாவால் ஆனது


தமிழ்ச்சங்கம் பாண்டியனால் அமைக்கப்பட்டது

கருத்தாப்பொருள்

குகைக்கோயில் பல்லவனால்

கட்டப்பட்டது


கோவலனொடு கண்ணகி வந்தாள்

உடன்நிகழ்ச்சிப்

பொருள்

ஆசிரியரோடு மாணவன் வந்தான்


மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையை விளக்குகிறேன்:

மூன்றாம் வேற்றுமை உருபுகள்:

  • ஆல், ஆன், ஓடு, ஒடு

மூன்றாம் வேற்றுமை பயன்கள்:

  • கருவி (Instrument)

  • கருத்தா (Agent)

  • உடனிகழ்ச்சி (Association)

உடன்தொக்க தொகை:

  • உருபும் பயனும் மறைந்து வருவது

எடுத்துக்காட்டுகள்:

  1. கருவி:

  • கத்தி வெட்டினான் (கத்தியால் வெட்டினான்)

  • கோல் அடித்தான் (கோலால் அடித்தான்)

  • பேனா எழுதினான் (பேனாவால் எழுதினான்)

  1. கருத்தா:

  • தீ வேகினான் (தீயால் வேகினான்)

  • புலி கொன்றது (புலியால் கொல்லப்பட்டது)

  • மழை நனைந்தான் (மழையால் நனைந்தான்)

  1. உடனிகழ்ச்சி:

  • நண்பன் வந்தான் (நண்பனோடு வந்தான்)

  • மகன் சென்றான் (மகனோடு சென்றான்)

  • தம்பி நடந்தான் (தம்பியோடு நடந்தான்)


  • மரம்  +  குடம்  =  மரக்குடம்

  • இரும்பு  +  தூண்  =  இரும்புத்தூண்

  • தங்கம்  +  தாலி  =  தங்கத்தாலி

  • “நான்காம் வேற்றுமையுருபும் (கு) பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.

  • குடை  +  கம்பி  =  குடைக்கம்பி

    • குடைக்கு உரிய கம்பி

  • சட்டை  +  துணி  =  சட்டைத்துணி

  • நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
    • அவன் + கொடு

    • அவன் + கு + கொடு = அவனுக்கு + கொடு

    • அவனுக்குக் கொடு

  • “ஐந்தாம் வேற்றுமை உருபும் (இன், இல்) பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.

  • அடுப்பு  +  புகை  =  அடுப்புப்புகை

    • அடுப்பினது புகை

    • அடுப்பினால் உண்டான புகை

    • அடுப்பினில் உருவாகிய புகை

  • விழி  +  புனல்  =  விழிப்புனல்

  • “பண்புத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.

  • புது  +  குடம்  =  புதுக்குடம்

  • வட்டம்  +  பலகை  =  வட்டப்பலகை

  • பொய்  +  செய்தி  =  பொய்ச்செய்தி

  • ‘இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்’ வல்லினம் மிகும்.

    • சாரைப்பாம்பு என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் சாரை என்னும் பெயரும் பாம்பையே குறிக்கிறது. பாம்பு என்னும் பெயரும் பாம்பையே குறிக்கிறது. பாம்பு என்பது பொதுப்பெயர்; சாரை என்பது பாம்பினங்களுள் ஒன்றைக் குறிக்கும் சிறப்புப் பெயராகும்.

  • வேழம்  +  கரும்பு  =  வேழக்கரும்பு

  • தாமரை  +  பூ  =  தாமரைப்பூ

  • மார்கழி  +  திங்கள்  =  மார்கழித்திங்கள்

  • ‘உவமைத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.

    • உவமைத் தொகை என்பது, போல முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும். 

    • போல, புரைய, மான, கடுப்ப, ஒப்ப, உறழ, நேர, அன்ன, இன்ன முதலியனவும் உவம உருபுகளாகும்.

  • தாமரை  +  கண்ணன்  =  தாமரைக்கண்ணன்

  • பவளம்  +  செவ்வாய்  =  பவளச்செவ்வாய்

  • மலை  +  தோள்  =  மலைத்தோள்

  • அரை, பாதி என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்” பின்வரும் வல்லினம் மிகும்.

    • அரை  +  காணி  =  அரைக்காணி

    • அரை  +  படி  =  அரைப்படி

    • பாதி  +  பங்கு  =  பாதிப்பங்கு

    • அரை  +  தொட்டி  =  அரைத்தொட்டி

    • பாதி  +  செலவு  =  பாதிச்செலவு

  • எட்டு, பத்து என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்” பின்வரும் வல்லினம் மிகும்.

    • எட்டு  +  தொகை  =  எட்டுத்தொகை

    • பத்து  +  பாட்டு  =  பத்துப்பாட்டு

  • ‘முற்றியலுகரச் சொற்களின் பின்’ வரும் வல்லினம் மிகும்.

    • வல்லின எழுத்துகள் என்பது க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு எழுத்துகள். இவை வலிய ஓசை உடையதால் இப்பெயர் பெற்றன. 

    • முற்றியலுகரச் சொற்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: அப்படிச் சொல், எப்படிச் சொல்வான், திருக்குறள்

    • பெரும்பாலான முற்றியலுகரச் சொற்கள் 'வு' என முடியும். ஓரே வகையாக அமைந்த குற்றியலுகரச் சொல்லிற்கும் முற்றியலுகரச் சொல்லிற்கும் பொருள் வேறுபாடு உண்டு. மொழி இறுதிக் குற்றியலுகரச் சொல் பெயராகவே இருக்கும். 

      • திரு  +  கோவில்  =  திருக்கோவில்

      • புது  +  புது  =  புதுப்புது

      • பொது  +  சாலை  =  பொதுச்சாலை

  • “தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’காரத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.

    • வினா  +  குறி  =  வினாக்குறி

    • பலா  +  பழம்  =  பலாப்பழம்

  • ஆய், போய் என்னும் வினை எச்சங்களுக்குப்’ பின்வரும் வல்லினம் மிகும்.

    • கருத்தாய்  +  கேட்டாள்  =  கருத்தாய்க் கேட்டாள்

    • அன்பாய்  +  சொன்னார்  =  அன்பாய்ச் சொன்னார்

    • போய்  +  பார்  =  போய்ப் பார்

  • முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

    • முன்னர்  +  கண்டோம்  =  முன்னர்க் கண்டோம்

    • பின்னர்  +  காண்போம்  =  பின்னர்க் காண்போம்

    • முன்னர்  +  செல்க  =  முன்னர்ச் செல்க

    • பின்னர்  +  பணிந்தார்  =  பின்னர்ப் பணிந்தார்

  • வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.

    • குற்றியலுகரம், ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும்பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். 

    • குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம் (குறுகிய ஓசையுடைய உகரம்)

    • குற்றியலுகரம் ஆறு வகைப்படும். 

      1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்

      2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

      3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

      4. வன்தாெடர்க் குற்றியலுகரம்

        • வன்றொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகர வகைகளுள் ஒன்று. நாக்கு, கச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று போன்ற சொற்களில் வல்லினம் மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு, சு, டு, து, பு, று) வல்லின மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து (க், ச், ட், த், ப், ற்) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. 

          • பட்டு  +  சேலை  =  பட்டுச்சேலை

          • பத்து  +  பாட்டு  =  பத்துப்பாட்டு

      5. மென்தாெடர்க் குற்றியலுகரம் 

      6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

  • அ, இ, உ - சுட்டெழுத்தின் பின் வல்லினம் மிகும்.
  • அ + க் + குதிரை = அக்குதிரை

  • இ + க் + கதவு = இக்கதவு

  • உ + ப் + பக்கம் = உப்பக்கம்

  • அங்கு, இங்கு, எங்கு - இடப்பொருளின் பின் வல்லினம் மிகும்.
  • அங்குச் சென்றான்

  • இங்குப் பார்த்தான்

  • எங்குக் கண்டாய்?

  • அப்படி, இப்படி, எப்படி - பின்வரும் வல்லினம் மிகும்.
  • அப்படிச் செய்தான்

  • இப்படிச் சொல்

  • எப்படிப் பேசினான்?

  • இனி, தனி - பின்வரும் வல்லினம் மிகும்.
  • இனிக் காண்போம்

  • தனிச்சொல்

  • அன்றி, இன்றி - பின்வரும் வல்லினம் மிகும்.
  • தடையின்றிச் செல்

  • அந்த மாணவனன்றிப் பிற மாணவர் பேசக் கூடாது.

  • அந்தப் பள்ளியில் மாணவனன்றிப் பிற மாணவர் பேசக் கூடாது.

  • என, மிக, நடு, பொது - பின்வரும் வல்லினம் மிகும்.
  • எனச் சொன்னான்

  • மிகச்சிறிய செடி

  • நடுக்கடல்

  • பொதுக்கூட்டம்

  • ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
    • உயிர் எழுத்து – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
      மகர வரிசை – மா, மீ, மூ, மே, மை, மோ
      தகர வரிசை – தா, தீ, தூ, தே, தை
      பகர வரிசை – பா, பூ, பே, பை, போ
      நகர வரிசை – நா, நீ, நே, நை, நோ

    • ககர வரிசை – கா, கூ, கை, கோ
      சகர வரிசை – சா, சீ, சே, சோ தகர
      வகர வரிசை – வா, வீ, வை, வௌ
      யகர வரிசை – யா
      குறில் எழுத்து – நொ, து



  • ஓரெழுத்து ஒரு மொழியின்(42) பொருள் அறிவோம்

  • 1. ஆ - பசு

  • 2. ஈ - கொடு

  • 3. ஊ - இறைச்சி

  • 4. ஏ - அம்பு

  • 5. ஐ - தலைவன்

  • 6. ஓ - மதகு நீர் தாங்கும் பலகை

  • 7. கா - சோலை

  • 8. கூ - பூமி

  • 9. கை - ஒழுக்கம்

  • 10. கோ - அரசன்

  • 11. சா - இறந்து போ

  • 12. சீ - இகழ்ச்சி

  • 13. சே - உயர்வு

  • 14. சோ - மதில்

  • 15. தா - கொடு

  • 16. தீ - நெருப்பு

  • 17. தூ - தூய்மை

  • 18. தே - கடவுள்

  • 19. தை - தைத்தல்

  • 20. நா - நாவு

  • 21. நீ - முன்னிலை ஒருமை

  • 22. நே - அன்பு

  • 23. நை - இழிவு

  • 24. நோ - வறுமை

  • 25. பா - பாடல்

  • 26. பூ - மலர்

  • 27. பே - மேகம்

  • 28. பை - இளமை

  • 29. போ - செல்

  • 30. மா - மாமரம்

  • 31. மீ - வான்

  • 32. மூ - மூப்பு

  • 33. மே - அன்பு

  • 34. மை - அஞ்சனம்

  • 35. மோ - முகத்தல்

  • 36. யா - அகலம்

  • 37. வா - அழைத்தல்

  • 38. வீ - மலர்

  • 39. வை - புல்

  • 40. வௌ - கவர்

  • 41. நொ - நோய்

  • 42. து - உண்

  • தீச்செயல்

  • கைக்குழந்தை

  • பூப்பந்தல்

  • நாக்குழறியது

  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - பின்வரும் வல்லினம் மிகும்.
  •  பாடாத் தேனீ

  • காணாக் காட்சி

  • தீராத் துன்பம்

  • அகர ஈற்று வினையெச்சம் - பின்வரும் வல்லினம் மிகும்.
  • வரச்சொன்னாள்

  • தேடப்போனார்

  • மெல்லப் பேசினான்

  • இகர ஈற்று வினையெச்சம் - பின்வரும் வல்லினம் மிகும்.
  • ஓடிப்போனான்

  • பேசிப்பார்த்தார்

  • சூடிக்கொண்டாள்

  • ஆறாம் வேற்றுமைத்தொகை - பின்வரும் வல்லினம் மிகும்.
  • புலித்தோல்

  • பூனைக்கால்

  • கங்கைக்கரை

  • ஏழாம் வேற்றுமை உருபும் (கண்) பயனும் உடன்தொக்க தொகை - பின்வரும் வல்லினம் மிகும்.
  • சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னையின்கண் உள்ள பல்கலைக்கழகம்)

  • ஆக என்னும் சொல்லுருபின் பின் வல்லினம் மிகும்.
  • அன்பாகப் பேசினார்

  • சிறப்பாகத் தொடங்கப்பட்டது

  • மெதுவாகச் சிரித்தாள்

  • கனிவாகக் கூறினார்

  • ய, ர, ழ ஒற்றுக்குப் பின் வல்லினம் மிகும்.
  • வேர்ப் + பலா

  • வாழ்க் + கை

  • வாய்ப் + பேச்சு

  • திசைப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.
  • கிழக்குப் பக்கம்

  • மேற்குத் தொடர்ச்சி மலை

  • சில மென்றொடர்க் குற்றியலுகரம் பின் வல்லினம் மிகும்.
  • நண்டுக் கூட்டம்

  • பங்குச் சந்தை

  • சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் பின் வல்லினம் மிகும்.
  • மரபுக்கவிதை

  • அரசுப்பள்ளி

  • உழவுத்தொழில்

  • தொகைநிலைத் தொடர்கள்பின் வல்லினம் மிகும்.
  • சிவப்புப் புடவை

  • முல்லைக்காடு

  • முத்துப்பற்கள்

  • உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
    • உரிச்சொல் என்பது, பொருளுக்கு உரிமை உடைய பண்பை உணர்த்தும் பெயராகும்.

    • பொருள்கள் உயிர்ப் பொருள்கள், உயிர் இல்லாப் பொருள்கள் என இருவகைப்படும்.

    • இவ்விருவகைப் பொருள்களுக்குரிய பண்பு, குணப்பண்பு, தொழிற்பண்பு என இருவகைப்படும்.

    • தொல்காப்பியர் சொல்லதிகாரம் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார்.

      1. சால, உறு, தவ, நனி, கூர், கழி - மிகுதி

      2.  கடி - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு

      3. தட, கய, நளி - பெருமை

  •  சாலப் பேசினார்

  • தடக்கை

  • தனிக்குற்றெழுத்துக்குப் பின்வரும் ஆகாரச்சொல் பின் வல்லினம் மிகும்.
  • நிலாப்பாட்டு

  • பலாப்பழம்

  • உருவகங்களில் வல்லினம் மிகும்.
  • வாழ்க்கைப் படகு

  • கண்ணீர்ப் பூக்கள்

  • மெல்ல, உரக்க, நிரம்ப, நிறைய பின் வல்லினம் மிகும்.
  • மெல்லப் பேசு

  • உரக்கச் சொல்

  • நிரம்பக் கொடுத்தார்

  • நிறையக் கற்றான்

  • எல்லா, அனைத்து பின் வல்லினம் மிகும்.
  • எல்லாக் குழந்தைகளும் ஒன்றுகூடின

  • அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை

  • ஒற்று இரட்டிக்கும் குற்றியலுகரங்கள் பின் வல்லினம் மிகும்.
  • நாடு + பற்று  = நாட்டுப்பற்று

  • ஆறு + பெருக்கு = ஆற்றுப் பெருக்கு

  • வயிறு + பசி = வயிற்றுப் பசி

  • சின்ன என்னும் பெயரடையின் பின் வல்லினம் மிகும்.
  • சின்னக்குடை

  • சின்னப்பெண்

  • சின்னத்தட்டு

  • விட, கூடப் பின் வல்லினம் மிகும்.
  • கத்தியைவிடக் கூர்மை

  • கூடக்கொஞ்சம் கொடு

  • கீழ், இடை பின் வல்லினம் மிகும்.
  • கீழ்க்காணும் செய்திகள்

  • புலிகளிடைப் பசுபோல

பார்வை

\https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.pdf/132

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன