செவ்வாய், 25 ஜூலை, 2023

வலைப்பதிவு உருவாக்கமும் பதிவேற்றமும்

தமிழ்த்துறையின் கணித்தமிழ் யுகமன்றத்தின் சார்பாக ”வலைப்பதிவு உருவாக்கமும் பதிவேற்றமும்” எனும் தலைப்பில் பயிலரங்கம் இன்று (25.07.2023) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்வின் பயிற்றுநராகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார். வலைப்பதிவு உருவாக்கும் முறை, பதிவுகள் மற்றும் தரவுகள் பதிவேற்றும் முறை, வாசகர்கள் ஊடாடும் முறை, வலைப்பதிவின் நன்மைகள் ஆகியவற்றை சிறப்பாகப் பயிற்றுவித்தார். பல துறைசார்ந்த  மாணவர்கள் 75 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மாணவர்களின் பல வினாக்களுக்குத் தெளிவாக விடையளித்து வலைப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்வு மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது. இந்நிகழ்வை கணித்தமிழ் யுகமன்ற ஒருங்கிணைப்பாளர் ப.ராஜேஷ் ஒருங்கிணைத்தார்.

விக்கித்திட்டங்கள் அறிமுகம் (Introduction to Wiki Projects)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக விக்கித்திட்டங்கள் அறிமுகம் (Introduction to Wiki Projects) எனும் பொருண்மையிலான பயிற்சி 25.07.2023 அன்று பிற்பகல் 2.10 முதல் 3.10 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்களும் கணினி அறிவியல்துறைத் தலைவர் முனைவர் கே.சித்ரா அவர்களும் பயிற்சி பெறும் மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் பயிற்றுநராகத் திருமதி வா.காருண்யா (தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர்) அவர்கள் கலந்து கொண்டு, விக்கித் திட்டங்கள் அறிமுகம், விக்கிமூலம் கணக்கு உருவாக்கம் குறித்துப் பயிற்சியளித்தார்கள். இந்நிகழ்வில் 64 - ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார்கள்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

தமிழ்விடு தூது - மதுரைச் சொக்கநாதர்

தமிழ்விடு தூது - (முதல் 25 கண்ணிகள்) 
மதுரைச்சொக்கநாதர் 
கலிவெண்பா

1. சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந் 
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 

2. டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் 
திக்கு விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 

3. செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு 
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 

சனி, 4 பிப்ரவரி, 2023

கடித இலக்கியம் 1

கோயமுத்தூர், 20.07.2016
அன்புக் குழந்தைகளுக்கு,

நீங்கள் வாழும் உலகம் அற்புதமானது. அன்பாய் வாழுங்கள் என்று ஆசிரியன் சொல்வான். அவன் வாழ மாட்டான். ஆய்விற்கு முதன்மை கொடுப்பவன். ஆய்வினால் புத்துலகைப் படைக்க முடியும் எண்ணம் அவனுள். தொல்காப்பியன், சாக்ரடீசு, ஐன்சுடீன், நெப்பொலியன், அலெக்சாண்டர், அம்பேத்கார், அப்துல்கலாம், காமராசர், நல்லக்கண்ணு, கக்கன் எனப் பலபேர் தன்னுள் குடிகொண்டுள்ளனர் என்ற மிதமிதப்பு. சொல்வது உண்மை. செயலில் பொய்மை. அப்படி வாழ நினைக்காதீர் என் அன்புக் குழந்தைகளே...

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

100 கிராமங்களில் 100 GLUG

*VGLUG's Next Milestone - Free Code Camp For Kids*

கணினி, தொழில்நுட்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரையிலும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை VGLUG அமைப்பு 100 கிராமங்களில் 100 GLUGs என்கிற முன்னெடுப்பின் மூலம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக VGLUG அமைப்பு 'Free Code Camp For Kids' என்கிற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பானாம்பட்டு GLUG-ல் அடுத்த இரண்டு (அக்டோபர் 8 மற்றும் 9) நாட்களுக்கு கணினி பற்றிய அறிமுகத்தையும், கோடிங்-ஐ எளிய முறையிலும், விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் மூலமாகவும் கற்றுதர இந்த கேம்ப்பை VGLUG நடத்துவுள்ளது.

இது போன்று, குழந்தைகளுக்கான இலவச கோடிங் வகுப்புகள்/கேம்ப் உங்களது கிராமத்திலோ அல்லது பள்ளியிலோ நடத்த விரும்பினால் எங்களை 9600789681 தொடர்பு கொள்ளவும். 

https://vglug.org

https://vglug.org/category/villupuram-glug/100-glugs-in-100-villages/

சிந்துப்பாவியல்

சிந்துப்பாவியல் - தேர்வுக் குறிப்புகள் இரா. திருமுருகன் அருளிய சிந்துப்பாவியல்: முழுமையான தேர்வுக் குறிப்புகள் ...