16.11.2023 அன்று தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ் விக்கிமூலத்தில் திருக்குறள் இருப்பும் தேவையும் என்ற தலைப்பில் கருத்து வழங்கினேன் (இணை ஆசிரியர் முனைவர் சே. முனியசாமி, கட்டுரைப் பொருண்மையை எடுத்துரைத்தார்.). அந்த அமர்வை மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர் கருணாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே அமர்வில் என்னுடைய பதினேழாவது நூலாகிய விக்கித் திட்டங்களில் பைத்தான் பயன்பாடு நூல் முனைவர் இனிய நேரு அவர்கள் வெளியிட கேரள மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்ட நிகழ்வும் நடந்தது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த நூலை வெளியிடுவதற்குச் சூழலை உருவாக்கித் தந்த தமிழ் இணையக் கழகத்தின் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்கு நன்றியுடையேன். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வருகின்றேன் என்பதை அறிந்த திண்டுக்கல், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமாகிய பேரா.சி.சிதம்பரம் அவர்கள் அன்று காலை 10.00 மணியளவில் அந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலைப்பூ உருவாக்கம் குறித்தும், விக்கித் திட்டங்கள் குறித்தும் உரையாட வாய்ப்பு ஏற்படுத்திருந்தார்கள். அவர்களுக்கும் நன்றியுடையனாவேன்.
கிண்டிலில் வெளியிடப் பெற்றுள்ளது.
அதன் உரலி - விக்கிமீடியத் திட்டங்களில் பைத்தான் பயன்பாடு : Python usage in Wikimedia projects (Tamil Edition) https://amzn.eu/d/9O4nTz1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன